உச்சநீதிமன்றத்தின் கறார் உத்தரவு.. ரெயில் டிக்கெட் முன்பதிவில் இன்று முதல் அமலுக்கு வந்த மாற்றம்

ஆன்லைனில் அல்லது ஆப்லைனில் வாங்கும் முறையின் அடிப்படையில், பயணிகளின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் வித்தியாசமாக மதிப்பளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.
உச்சநீதிமன்றத்தின் கறார் உத்தரவு.. ரெயில் டிக்கெட் முன்பதிவில் இன்று முதல் அமலுக்கு வந்த மாற்றம்
Published on: 
Summary

ரெயில் நிலைய கவுண்டரில் பயணசீட்டு முன்பதிவு செய்வோருக்கும் இன்று முதல் காப்பீடு வழங்கப்படுகிறது.

ஐஆர்சிடிசி மூலம் ஆன்லைனில் பயணச்சீட்டு முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த டிராவல் இன்சூரன்ஸ், இன்று முதல் (அக்டோபர் 27) ரெயில் நிலைய கவுன்டரில் வாங்கப்படும் பயணச்சீட்டுகளுக்கும் வழங்கப்படும்.

முன்பதிவுப் படிவத்தில் காப்பீட்டு விருப்பத்தை தேர்ந்தெடுப்பதற்கு ஒரு பகுதியில் கூறப்பட்டிருக்கும். விருப்பமுள்ள பயணிகள் படிவத்தில் உள்ள கட்டத்தில் தங்கள் சம்மதத்தைத் தெரிவிக்க வேண்டும்.

காப்பீடு தொடர்பான துல்லியமான தகவல்களை பெறுவதற்கு, பயணிகள் படிவத்தில் தங்கள் கைபேசி எண்ணையும் சேர்க்க வேண்டும். காப்பீட்டிற்கு கட்டணமும் வசூலிக்கப்படும்.

காப்பீடு

பயண தூரம் எதுவாக இருந்தாலும், எந்த வகுப்பு முன்பதிவு பெட்டியாக இருந்தாலும் அனைத்திற்கும் பொதுவாக காப்பீட்டுத் தொகை 45 பைசா. இந்த பாலிசியை எடுப்பது பயணிகள் விருப்பத்தேர்வு ஆகும்.

இதன்படி ரெயில் பயணத்​தின் போது ஏதேனும் எதிர்​பாராத விபத்து ஏற்​பட்​டால், அதி​கபட்​ச​மாக ரூ. 10 லட்​சம் வரை இழப்​பீடு வழங்​கப்​படும்.

விபத்​தினால் மரணமோ அல்​லது நிரந்​தர முழு உடல் ஊனமுற்​றால் ரூ.10 லட்​சம், நிரந்​தர பகுதி உடல் ஊனமடைந்​தால் ரூ.7.50 லட்சம், காயங்​களுக்​கான மருத்​து​வ​மனை செல​வு​கள் ரூ. 2 லட்​சம் வரை​யும், உடலை சொந்த ஊருக்​குக் கொண்டு செல்​ல ரூ. 10 ஆயிர​ம் என இழப்​பீடு பெற முடியும்.

உச்சநீதிமன்ற உத்தரவு

ரெயில் நிலைய கவுண்டர்கள் மூலம் நேரடியாக டிக்கெட் முன்பதிவு செய்யும் சாதாரண பயணிகளுக்கு சமமான பாதுகாப்பை உறுதி செய்ய உச்ச நீதிமன்றம் ரெயில்வே அமைச்சகத்துக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து இது அமல்படுத்தப்பட்டுள்ளது.

பயணச்சீட்டுகளை ஆன்லைனில் அல்லது ஆப்லைனில் வாங்கும் முறையின் அடிப்படையில், பயணிகளின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் வித்தியாசமாக மதிப்பளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பின்போது குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com