எஃப்-35 போர் விமானத்திற்கு அருகில் கூட விட மாட்டேங்கிறீங்க: அமெரிக்க தளபதி முன்னிலையில் இந்திய விமானப்படை தளபதி கலகல பேச்சு!

அமெரிக்கா காக்பிட்டை தங்களுக்குக் காட்டவில்லை என்றாலும், நெருக்கமான அணிவகுப்பு வான்வெளியில் பறக்க அனுமதித்ததாக அவர் குறிப்பிட்டார்.
Air Chief Marshal AP Singh
Published on: 
Summary

ஐந்தாம் தலைமுறை போர் விமானத் தேவைகள் குறித்துப் பேசிய அவர், ரஷ்யா தரப்பிலிருந்து தங்களது எஸ்-57 போர் விமானத்தை வழங்குவதற்கான சலுகை வந்துள்ளது உண்மைதான் என்றாலும், அது குறித்து இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

அமெரிக்காவின் அதிநவீன எஃப்-35 போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வமான சலுகையும் அமெரிக்கா தரவில்லை என்று இந்திய விமானப்படை தளபதி ஏ.பி. சிங் தெளிவுபடுத்தியுள்ளார். அருகில் அமர்ந்திருந்த அமெரிக்க பசிபிக் வான்படை தளபதி கெவின் சினீடர் முன்னிலையில் அவர் நகைச்சுவையாகப் பேசிய கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.

ஜோத்பூரில் நடைபெற்ற பன்னாட்டு வான்படை பயிற்சியான 'தரங் சக்தி' நிகழ்வின் போது செய்தியாளர்களைச் சந்தித்த விமானப்படை தளபதி ஏ.பி.சிங், எஃப்-35 போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக அமெரிக்கா தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக எந்தப் பேச்சும் அல்லது ஆஃபரும் வரவில்லை என்றார்.

அமெரிக்க பசிபிக் வான்படை தளபதி ஜெனரல் கெவின் சினீடர் மேடையில் உடனிருந்தபோது, "உங்கள் ஆட்கள் எங்களை அந்த விமானத்திற்கு அருகில் கூட நெருங்க விடுவதில்லை, பிறகு அதை எங்களுக்கு விற்பனை செய்வதைப் பற்றிப் பேசுகிறீர்கள்" என்று ஏ.பி. சிங் நகைச்சுவையாகக் கூறினார். மேலும், அமெரிக்கா காக்பிட்டை தங்களுக்குக் காட்டவில்லை என்றாலும், நெருக்கமான அணிவகுப்பு வான்வெளியில் பறக்க அனுமதித்ததாக அவர் குறிப்பிட்டார்.

ஐந்தாம் தலைமுறை போர் விமானத் தேவைகள் குறித்துப் பேசிய அவர், ரஷ்யா தரப்பிலிருந்து தங்களது எஸ்-57 போர் விமானத்தை வழங்குவதற்கான சலுகை வந்துள்ளது உண்மைதான் என்றாலும், அது குறித்து இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார். அரசாங்கத்திடமிருந்து முறையான ஒப்புதல் வந்த பின்னரே அது இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்யுமா என்பது மதிப்பீடு செய்யப்படும் என்றார்.

வெளிநாட்டு போர் விமானங்களின் மீதான தேடல்கள் ஒருபுறம் இருக்க, இந்திய விமானப்படை தனது நீண்டகால பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் உள்நாட்டிலேயே ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் முயற்சிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வருவதாக அவர் உறுதிப்படுத்தினார். அமெரிக்க தளபதியைக் குறிவைத்து விமானப்படை தளபதி ஏ.பி. சிங் மேடையிலேயே நகைச்சுவையாகக் கூறிய இந்த கருத்துகள் தற்போது இணையத்திலும் பாதுகாப்புத் துறையிலும் வைரலாகப் பேசப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com