அமைதி பத்திரம் விவகாரம்: டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பால் நேகா போராவுக்கு பின்னடைவு

அமைதி பத்திரத்தில் கையெழுத்திடுவதற்கான நோட்டீசை எதிர்த்து மனுதாக்கல் செய்தார்.
நேகா போரா
நேகா போரா
Published on: 

SIR குளறுபடி தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று சிஜேபி-யின் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 16-ந்தேதி தேசியக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு அகில இந்திய மாணவர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்தது. இதன் தலைவர் நேகா போராவும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அமைதி பத்திரத்தில் கையெழுத்திட நோட்டீஸ்

அப்போது, டெல்லி போலீசார் நேகா போராவை தடுப்புக்காவலில் கைது செய்தனர். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அப்போது, சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அமைதி பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்று போலீஸ் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நோட்டீசை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேகா போரா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது நேகா போராவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

நேற்று இருதரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், தீர்ப்பை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த நிலையில் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

அடிப்படை உரிமையை மீறுவதாகும்

நேகா போரா தரப்பில் மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் அபிக் சிம்னி, நோட்டீஸ் வழங்கப்பட்டது தெளிவற்றது மற்றும் உண்மைக்கு புறம்பானது. மேலும், அரசியலமைப்பில் ஆர்டிக்கிள்ஸ் 19 மற்றும் 21 வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மீறுவதாகும்.

அமைதி குலைவதற்கான சாத்தியக்கூறை நிலைநாட்டத் தேவையான போதிய ஆதாரங்கள் அதில் இல்லை என்றும், அத்தகைய அமைதி குலைவு எந்தக் காலக்கட்டத்தில், எந்தச் சூழலில் அல்லது எந்த நிகழ்வின் தொடர்பில் ஏற்படக்கூடும் என்பது குறித்து அதில் குறிப்பிடப்படவில்லை என்றும் வாதிட்டார்.

டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மா, "போரா (Bora) விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 12 சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, போரா பங்கேற்ற ஒரு கூட்டத்தில், சமூக ஆர்வலர் பிரசாந்த் பூஷண் மற்றும் காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) தலைவர்கள் ஆட்சி மாற்றத்திற்கு அழைப்பு விடுத்தனர்" என்றார்

இதற்குப் பதிலளித்த போரா தரப்பு வழக்கறிஞர் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், "ஜனநாயகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதில் தவறொன்றும் இல்லை" என்றார். அதற்கு காவல்துறை தரப்பு வழக்கறிஞர், "ஆட்சி மாற்றம் என்பது வாக்குகளின் மூலமே நிகழ வேண்டுமே தவிர, டெல்லியில் கூடும் சமூக விரோதக் கும்பல்களால் அல்ல" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com