அர்னாப் புயல் எதிரொலி: ஆந்திராவில் 15 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - 1,80,000 மக்கள் வெளியேற்றம்

மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் அர்னாப் புயல் நிலை கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
Cyclone Arnab - Andhra Pradesh
Published on: 
Summary

ஆந்திரப் பிரதேசத்தில் அர்னாப் புயல் காரணமாக அதிகனமழை பெய்து வரும் நிலையில், 15 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைக்கு அருகில் உள்ள மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் அர்னாப் புயல் நிலை கொண்டிருந்ததாக இன்று காலை 6:30 மணிக்கு வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மேலும் இரண்டு மணி நேரத்தில், அர்னாப் புயல் கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்திய வானிலை ஆய்வு மையம்

இந்த நிலையில் தற்போது சக்திவாய்ந்த அர்னாப் புயல் ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு அருகே கரையை கடந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அர்னாப் புயல் கரையை கடந்துள்ள போதிலும், மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் எனவும், 1 முதம் 1.5 மீட்டர் வரை உயரக்கூடிய புயல் அலை ஆந்திரப் பிரதேசத்தின் தாழ்வான பகுதிகளை மூழ்கடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மக்கள் வெளியேற்றம்

அர்னாப் புயல் எதிரொலியை அடுத்து, ஆந்திரா மற்றும் ஒடிசாவின் பல மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக வெள்ள அபாய பகுதிகளில் இருந்து சுமார் 1,80,000 மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில் உள்ள விசாகபட்டினத்தில் இன்று அதிகாலை 5:30 மணி நிலவரப்படி 216 மில்லி மீட்டர் கனமழையும், கலிங்கப்பட்டினத்தில் 147 மில்லி மீட்டர் கனமழையும், காக்கிநாடாவில் 118 மில்லி மீட்டர் கனமழையும் மற்றும் மச்சிலிப்பட்டினத்தில் 115 மில்லி மீட்டர் கனமழையும் பதிவாகியுள்ளது.

விமான சேவை ரத்து

இதையடுத்து விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com