ஒரு மாதத்திற்கு பிறகு பெய்த பருவமழை - மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை

மும்பையில் ஒரு மாதத்திற்கு பிறகு பருவமழை பெய்த tஹு. வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஒரு மாதத்திற்கு பிறகு பெய்த பருவமழை - மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை
Published on

மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பையில் ஜூலை மாதம் பெய்த பலத்த மழையால் நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்தது. தற்போது ஏரிகளில் 91 சதவீதம் அளவுக்கு தண்ணீர் உள்ளது.

இதற்கிடையே, நேற்று மும்பை நகரில் பரவலாக மழை பெய்தது. சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு பெய்த கன மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நகரில் வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவியது.

இந்நிலையில் மும்பையில் இன்றும் பலத்த மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மும்பை நகருக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி, துலே, ஜல்கான் மற்றும் நாசிக் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com