வீடியோ: ஐஐடி மாணவர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் - இணையத்தில் சர்ச்சை

ஐஐடி பாம்பே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த பொறியியல் மாணவர் சாஹில் வக்கோடே தற்கொலை செய்து கொண்டார்.
Sahil Wakode - Exam Cheating CCTV
Published on
Summary

ஐஐடி பாம்பே கல்லூரியில் பொறியியல் மாணவர் செப்டம்பர் 18-ஆம் தேதி தற்கொலை செய்துகொண்ட நிலையில், முன்னதாக தேர்வு அறையில் மாணவன் மொபைல் போனை பயன்படுத்தி தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுவதும், அதை ஆசிரியர் கண்டித்து தேர்வு அறையில் இருந்து வெளியேற்றுவதுமான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

பொறியியல் மாணவர் தேர்வு முறைகேடு

ஐஐடி பாம்பே கல்லூரியில் சாஹில் வக்கோடே என்ற மாணவர் இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார்.

அப்போது கல்லூரியில் நடந்த தேர்வில், மாணவர் தான் வைத்திருந்த மொபைல்போனை பயன்படுத்தி, தேர்வு வினாத்தாளை சாட்ஜிபிடி செயலியில் பதிவிட்டு, விடைகளை பார்த்து எழுதியதாக தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

மாணவர் தற்கொலை

இதையடுத்து சில மணி நேரங்களுக்கு பிறகு, அந்த மாணவர் தனது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

மேலும் இதுகுறித்து உயிரிழந்த மாணவரின் தந்தை கூறுகையில், கல்லூரியில் தனது மகன் சாதி பாகுபாடு துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், சாதிப் பாகுபாடு குறித்து தங்களிடம் மாணவர் தெரிவித்ததாகவும் கூறினர்.

மாணவர்கள் போராட்டம்

பேராசிரியர் சூர்யநாராயண தூல்லா தங்கள் மகனுக்கு எதிராக பாகுபாடு காட்டியதாக குற்றம்சாட்டி, அவரை கைது செய்யும்படி மாணவரின் பெற்றோர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து ஐஐடி பம்பாய் பேராசிரியர்கள், பேராசிரியர் தூல்லா தனது வேலையை செய்ததற்காகவே அவதூறுக்கு உள்ளாக்கப்படுவதாக கூறி, ஆசிரியருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

பேராசிரியர் இடை நீக்கம்

இதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், பேராசிரியர் சூர்யநாராயண தூல்லாவை பதவியில் இருந்து பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.

சிசிடிவி காட்சி

இந்த நிலையில் தற்போது தேர்வு அறையின் சிசிடிவி காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்த காணொளியில் கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்திருந்த சாஹில், தேர்வு எழுதும்போது கைபேசி பயன்படுத்துவது பதிவாகியுள்ளது.

இதை பார்த்த பேராசிரியர் தூல்லா, மாணவரிடம் பேசுவதும், பின்னர் மாணவரிடம் இருந்த மொபைல்போனை வாங்குவதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து மாணவருக்கும் ஆசிரியருக்கும் இடையேயான உரையாடலை தொடர்ந்து, அவர் தேர்வு அறையில் இருந்து வெளியேறுவதும் பதிவாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com