22 மணி நேரம் காவலில் வைக்கப்பட்டேன்...யூடியூபர் துருவ் ரதீ குற்றச்சாட்டு

போராட்டத்தில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்த சிஜேபியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டனர்.
YouTuber Dhruv Rathee
Published on: 

பிரபல யூடியூபர் துருவ் ரதீ, தன்னை போலீசார் கடத்திச் சென்றதாகவும், சுமார் 22 மணி நேரம் காவலில் வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். விடுவிக்கப்பட்ட பிறகு அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் இருந்து அழைத்துச் சென்ற போலீசார்

டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி பதவி விலக கோரி சிஜேபி திட்டமிட்டிருந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னதாக ஹரியானா மாநிலம் குருகிராமில் துருவ் ரதீயின் இல்லத்திற்கு சென்ற போலீசார், தடுப்புகாவலில் அழைத்து சென்றனர்

போராட்டத்தில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்த சிஜேபியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களில் துருவ் ரதீயும் ஒருவராவார்.

கைது செய்யப்படவில்லை,கடத்தப்பட்டேன்

போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், துருவ் ரதீ தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிடப்பட்டது.

அதில், "நான் கைது செய்யப்படவில்லை, காவலில் வைக்கப்படவும் இல்லை. நான் கடத்தப்பட்டேன்" என்று அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், தன்னை அழைத்துச் செல்லும்போது கைது செய்வதற்கான வாரண்ட் வழங்கப்படவில்லை என்றும், வழக்கறிஞரைத் தொடர்புகொள்ள அனுமதிக்கப்படவில்லை என்றும், எங்கு அழைத்துச் செல்கிறார்கள் என்ற தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நான் இந்தியக் குடிமகன்

தனது குடியுரிமை தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களுக்கும் துருவ் ரதீ பதிலளித்துள்ளார்.

தான் இந்தியக் குடிமகன் என்றும், தொடர்ந்து இந்தியக் குடிமகனாகவே இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனது குடியுரிமை குறித்து வெளியாகும் சில தகவல்கள் தவறானவை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் போராட்டத்திற்கு முன்னதாக டெல்லி காவல்துறையால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அதிகாரமற்ற அவசரநிலை என்று விமர்ச்சித்துள்ளார், மேலும் நாட்டை பாதிக்கும் எந்தவொரு பிரச்சனையும் குறித்து தொடர்ந்து குரல் எழுப்புவேன் என்று தெரிவித்தார்.

சுமார் 22 மணி நேர காவல் அனுபவத்துக்குப் பிறகு துருவ் ரதீ விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது குற்றச்சாட்டுகள் அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com