நண்பர்கள் முன் ஆடையை அவிழ்க்க வற்புறுத்தும் கணவன்.. மனைவி பரபரப்பு புகார்

அடிக்கடி தனது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து கணவர் பார்ட்டி கொடுப்பார்5 வருட திருமண வாழ்க்கையில் பலமுறை இதுபோன்று நடந்துவந்துள்ளது.
நண்பர்கள் முன் ஆடையை அவிழ்க்க வற்புறுத்தும் கணவன்..  மனைவி பரபரப்பு புகார்
Published on

மும்பையில் வசிக்கும் 35 வயது திருமணமான பெண் ஒருவர் தனது கணவர் அவரது நண்பர்களின் முன் தன்னை  ஆடைகளை அவிழ்க்க கட்டயப்படுத்தியதாக புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் திரைப்பட VFX கலைஞராக பணியாற்றுவரும் அந்த பெண்  சர்வதேச ஏர்லைன் பைலட்டாக பணியாற்றிவரும் தனது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

அடிக்கடி தனது  நண்பர்களை வீட்டுக்கு அழைத்து பார்ட்டி கொடுக்கும் கணவர் TRUTH OR DARE விளையாடி, தனது மனைவியை அவர்களின் முன் ஆடைகளை அவிழ்க்கும்படி நிர்பந்தம் செய்து வந்துள்ளார். அதற்கு மனைவி மறுத்ததால் அவரை பல்வேறு சமயங்களில் அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்துள்ளன. தங்களின் 5 வருடதிருமண வாழ்க்கையில் பலமுறை கணவர் இடகுபோன்று தன்னை  நண்பர்கள்  முன்னிலையிலும் தனியாக இருக்கும்போதும் அடித்து துன்புறுத்தினார் என்று அப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக  எப்ஐஆர் பதிந்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com