உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்து கவலையளிக்கிறது-அகிலேஷ் யாதவ்

ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் குறித்த தகவல்களைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும்.
Akhilesh Yadav
Published on: 

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று ஜோஷிமத் அருகே மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

டிரான்ஸ் பாரத் ஏவியேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஹெலிகாப்டர், பத்ரிநாத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஹாதி பர்வதம் பகுதிக்கு அருகே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.அப்பகுதியில் பெய்து வரும் கனமழை, பனிப்பொழிவு மற்றும் அடர்ந்த மேகமூட்டம் காரணமாகக் கடுமையான பனிமூட்டம் நிலவியதே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்பு பணிகள் தீவிரம்

ஹெலிகாப்டர் காணாமல் போனதைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதில், ஜோஷிமத் அருகே உள்ள கிராமத்தின் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகிப் புகை மூட்டம் எழுந்தது கண்டறியப்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாமிற்கு அருகிலேயே இது விழுந்து நொறுங்கியுள்ளது

இந்த ஹெலிகாப்டரில் ஒரு பைலட் மற்றும் 5 பேர் என மொத்தம் என 6 பேர் பயணம் செய்துள்ளனர, இண்டஹ் நிலையில் விபத்துக்குள்ளானதை அடுத்து மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த ஹெலிகாப்டர் விபத்திற்கு அகிலேஷ் யாதவ் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலை தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

உத்தராகண்டில் ஹெலிகாப்டர் ஒன்று காணாமல் போனது குறித்த செய்தி மிகுந்த கவலையளிக்கிறது. அதை விரைவாகக் கண்டறிய அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்; ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் குறித்த தகவல்களைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும். மேலும், மேற்கொள்ளக்கூடிய அனைத்து மீட்பு நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

என்று தெரிவித்துள்ளார்.

X