அசாம், குஜராத் உள்பட வட மாநிலங்களில் வெளுத்து வாங்கும் மழை- 939 கிராமங்கள் மூழ்கின

7 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Heavy rain
Published on

தென்மேற்குப் பருவமழை காரணமாக வட மாநிலங்க ளில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. கன மழை யால் அசாமில் வெள்ளப் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மழைக்கு 14 பேர் உயிரிழந்தனர்.

61 பேர் பலி

அசாம் மாநிலத்தில் இதுவரை மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. 12 மாவட்டங்களில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் வீடுகள், சாலைகள் மற்றும் விவசாய நிலங்கள் மூழ்கியுள்ளன. நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சிவசாகர், சராதியோ, கோலாகாட் மற்றும் ஜோர் ஹாட் ஆகிய மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

939 கிராமங்கள் மூழ்கின

இந்த மாவட்டங்களில் உள்ள 939 கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளன. 24 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் வெள் ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அசாமின் சிவ சாகர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் திக்கோ ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரில் கார்கள் அடித்து செல்லப் பட்டன. அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாவை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் அழைத்து, தற்போதைய வெள்ள நிலவரம் குறித்து விசாரித்தார்.

இது தொடர்பாக முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,“நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்கு மத்திய அரசு அனைத்து விதமான உதவிகளையும் வழங்கும் என்று பிரதமர் அசாம் மக்களுக்கு உறுதியளித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

குஜராத்தில் கனமழையால் ஆறுகள், நீர் நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுவரை 40,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

கனமழைக்கு குஜராத் மாநிலத்தில் 5 பேர் உயிரிழந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அகமதாபாத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன. வாவ்த்ராட் மாவட்டத்தில் உள்ள பாபர் பகுதியில் 287 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு 18 தேசிய பேரிடர் மீட்புப்படை குழுக்களும், 32 மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்களும் அனுப்பப் பட்டுள்ளன. பல இடங்களில் துணை ராணுவமும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. குஜராத்தின் பல பகுதிகளில் இன்று 204.5 மி.மீ-க்கு மேல் மழை பெய்யக்கூடும் என எச்சரித்து, வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆறுகளில் வெள்ளம்

இமாச்சலப் பிரதேசத்தில், தொடர் கனமழை, நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக 134 சாலைகள் மூடப்பட்டுள்ளன. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பீகாரில் 17 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் கங்கை மற்றும் யமுனா உட்பட 10 ஆறுகளில் பெருக் டுத்து ஓடுகிறது. காக்ரா மற்றும் ஷார்தா உட்பட 4 ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்லியாவில், சரயு ஆற்றில் ஒரு அரசுப் பள்ளியும் ஒரு வீடும் அடித்துச் செல்லப்பட்டன. அதேசமயம் கோண்டாவில் 100 ஏக்கருக்கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கின.

X

Maalai Malar
www.maalaimalar.com