ஹத்ராஸ் விபத்து - 'நடப்பதை யார் தடுக்க முடியும்? அனைவரும் ஒரு நாள் இறந்துதான் ஆக வேண்டும்' - போலே பாபா

இன்று IANS செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் பேசியுள்ளார்எப்போது இறக்கிறார்கள் என்ற நேரம் மட்டுமே வேறுபடும்' என்று தெரிவித்துள்ளார்.
ஹத்ராஸ் விபத்து - 'நடப்பதை யார் தடுக்க முடியும்? அனைவரும் ஒரு நாள் இறந்துதான் ஆக வேண்டும்' - போலே பாபா
Published on

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த வாரம் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

நிகழ்ச்சியில் 88,000 பேர் கலந்துகொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 2.5 லட்சம் பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இதுவரை 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எப்.ஐ.ஆரில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இடையில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் வீடியோவில், இந்த நிகழ்வால் நான் மிகவும் வருத்தமடைந்தேன், இந்த வலியை தாங்குவதற்கான சக்தியை கடவுள் நமக்கு தரட்டும். அரசாங்கத்தின் மீதும் நிர்வாகத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். இந்த அசம்பாவிதத்துக்கு காரணமானவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று IANS செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த  பேட்டியில் , 'இந்த சம்பவம் எங்களை மிகவும் பாதித்துள்ளது. ஆனால் நடப்பதை யாரால் தடுக்க முடியும். பூமியில் பிறந்தவர்கள் ஒரு நாள் இறந்துதான் ஆகா வேண்டும்.எப்போது இறக்கிறார்கள் என்ற நேரம் மட்டுமே வேறுபடும்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும்' இந்த சம்பத்தை வைத்து எனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்க பார்க்கிறார்கள். கூட்டத்தில் விஷத் தன்மையுள்ள திரவம் தெளிக்கப்பட்டது. அதை நேரில் கண்ட சிலர் எங்களது வக்கீலிடம் அதை உறுதி செய்து வாக்குமூலம் அளித்துள்ளனர்' என்றும் தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com