குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தனி வரிசை - டிசம்பர் 1 முதல் அமல்!

இது தொடர்பாகக் குருவாயூர் தேவசம் வாரியத் தலைவர் கோபிநாத் மற்றும் நிர்வாகி ஹரிகோபால் ஆகியோர் கூட்டாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.
Guruvayur Temple
Published on: 
Summary

கேரள மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலுக்கு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் தரிசனத்தை எளிதாக்கும் வகையில், அவர்களுக்குத் தனி வரிசை ஏற்படுத்தக் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய நடைமுறை வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்

இந்திய அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இது தவிர, இக்கோவிலில் தினமும் நூற்றுக்கணக்கான திருமணங்கள் உள்ளிட்ட சுப வைபவங்களும் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாகக் கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் அலைமோதும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தனி வரிசை

பொது வரிசையில் நீண்ட நேரம் காத்து நின்று தரிசனம் செய்வதால், கோவிலுக்கு வரும் பெண்கள் மற்றும் சிறிய குழந்தைகள் பல்வேறு சிரமங்களையும் அசௌகரியங்களையும் சந்திப்பதாகத் தொடர்ந்து கூறப்பட்டு வந்தது.

இதனைக் கருத்தில் கொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தனி வரிசையை ஏற்படுத்தக் கோவில் நிர்வாகம் தற்போது முக்கிய முடிவு எடுத்துள்ளது.

டிசம்பர் 1-ஆம் தேதி முதல்

இது தொடர்பாகக் குருவாயூர் தேவசம் வாரியத் தலைவர் கோபிநாத் மற்றும் நிர்வாகி ஹரிகோபால் ஆகியோர் கூட்டாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதில், குருவாயூர் கோவிலுக்கு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நடமாட்டத்தை எளிதாக்கும் வகையிலும், அவர்கள் எவ்வித சிரமமும் இன்றி சுவாமி தரிசனம் செய்யும் வகையிலும் தனி வரிசைத் திட்டம் கொண்டு வரப்படுவதாகவும், வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் இந்த முறை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கோவில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையைப் பக்தர்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர்.

X