

டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான 'விண்ட்ஃபால்' வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. ஆனிலும், பெட்ரோல் ஏற்றுமதி மீதான வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி லிட்டருக்கு ரூ. 13.5-லிருந்து ரூ. 14-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு ரூ. 9.5-லிருந்து ரூ. 12.5-ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோல் ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு ரூ. 1.5 என்ற அளவில் மாற்றமின்றி தொடர்கிறது.
வரி உயர்வு:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது, உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் 'லாபத்தில்' திளைப்பது வழக்கம். பின்னர் மத்திய அரசு தலையிட்டு அதற்கு முட்டுக்கட்டை போடுவது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில், தற்போது ஜூன் 16 முதல் அமலுக்கு வரும் வகையில், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான விண்ட்ஃபால் வரியை (Windfall Tax) மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது.
புதிய வரி விகிதங்கள்:
மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் உற்பத்தி வரி (SAED) லிட்டருக்கு ரூ.13.5-இல் இருந்து ரூ.14 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஏ.டி.எஃப். எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூ.9.5-இல் இருந்து ரூ.12.5 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் ஏற்றுமதிக்கான வரி லிட்டருக்கு ரூ.1.5 என்ற பழைய நிலையிலேயே நீடிக்கிறது.