ஷாருக் கானை எச்சரித்த அம்பானி? - உலக அமைதி விருது வழங்கும் விழாவில் நடந்த சர்ச்சை

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ‘குளோபல் பீஸ் ஹானர்ஸ்’ என்ற நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.
Shah Rukh Khan and Ambani
Published on: 
Summary

மும்பையில் நேற்று நடைபெற்ற ‘குளோபல் பீஸ் ஹானர்ஸ்’ விழாவில் ஷாருக் கான், ரன்வீர் சிங், சச்சின் டெண்டுல்கர், ஆனந்த அம்பானி, சத்குரு உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ‘குளோபல் பீஸ் ஹானர்ஸ்’ என்ற நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியானது, 2008 மும்பை தாக்குதல், பஹல்காம் தாக்குதல் மற்றும் டெல்லி குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மும்பையில் கடந்த 2008 நவம்பர் 26 அன்று தாஜ் ஹோட்டலில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 166 பொதுமக்கள் உயிரிழந்தனர்.

அந்த தாக்குதலில் உயிர் பிழைத்த தேவிகா நடேசன் ரோட்டாவன் என்ற இளம்பெண்ணுக்கு நடிகர் ஷாருக் கான் உலக அமைதி விருதை வழங்கினார்.

இதையடுத்து கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது அறக்கட்டளையின் மூலம் ஆற்றிய தொண்டுகளுக்காக உலக அமைதி விருதை பெற்றார்.

இதைத்தொடர்ந்து ஈஷா அறக்கட்டளை நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு உலக அமைதி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

வன்முறைக்கு பதில் பேச்சுவார்த்தை

இந்த நிகழ்வில் பேசிய ஷாருக் கான், “ஒரு நாள், வெறுப்பை எப்படி அன்பாக மாற்றுவது என என் இளைய மகன் என்னிடம் கேட்டான்.

நான் அவனிடம், நாம் அனைவரும் வன்முறைக்கு பதிலாக அமைதி பேச்சுவார்த்தையை தேர்ந்தெடுத்தால், நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ முடியும் என கூறினேன்.

மேலும் பயங்கரவாத தாக்குதலில் தங்கள் உயிரை இழந்த அப்பாவி மக்களுக்கு எனது பணிவான அஞ்சலியையும், இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்த நமது துணிச்சலான வீரர்களுக்கு எனது மரியாதைக்குரிய வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன்” என கூறினார்.

இதையடுத்து நிகழ்ச்சி நடைபெற்ற மேடையில் ஷாருக் கான், சத்குரு மற்றும் தொழிலதிபர் ஆனந்த் அம்பானி ஆகியோர் பேசி கொண்டிருந்தனர்.

அப்போது ஆனந்த் அம்பானியிடம், ஷாருக் கான் ஏதோ ஒன்று கூறியபோது, ஆனந்த் அம்பானி தனது கையை நீட்டி ஷாருக் கானுடன் பேசியது இணையத்தில் வைரலாகியுள்ளது.

X