ஞானேஷ்குமார் பாஜக வேட்பாளர் வாய்ப்பை வழங்கினார்: அபிஜீத் தீப்கே பதிவு

வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்த பட்டியலில் 13 கோடி வாக்காளர்களின் பெயர் நீக்கம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
gyanesh kumar - abhijeet dipke
Published on: 
Summary

பொதுத் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பை தனக்கு ஞானேஷ் குமார் வழங்க முன்வந்ததாக, கேரளாவின் முன்னாள் தலைமை செயலாளர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், ஞானேஷ் குமார் நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல்களை உறுதி செய்வார் என அபிஜீத் தீப்கே பதிவிட்டுள்ளார்.

வாக்காளர்கள் பெயர் நீக்கம்

நாடு முழுவதும் சமீபத்தில் வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு தீவிர சீர்திருத்த பட்டியலில், 13 கோடி வாக்காளர்களின் பெயர் நீக்கம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து தலைமை தேர்தல் அதிகாரியான ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

கருத்து வேறுபாடு

மேலும் வாக்காளர் சிறப்பு சீர்திருத்த பட்டியல் தயாரிப்பு பணியில் ஈடுபட்ட தலைமை தேர்தல் அதிகாரிக்கும் மற்ற இரண்டு அதிகாரிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்ததாக செய்தி வெளியானது.

இதையடுத்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தேர்தல் போட்டிகளில் முறைகேடு செய்ததாக ஞானேஷ் குமார் மீது குற்றம்சாட்டினார்.

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மேலும் இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “முதலில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றிய ஞானேஷ் குமார், பாஜகவுக்காக ஆட்களை சேர்க்க பயன்படுத்தப்பட்டார்.

பின்னர் மோடியும், அமித்ஷாவும் அவரிடம் தேர்தல்களில் முறைகேடு செய்யும் பொறுப்பை ஒப்படைத்தனர்” என்று பதிவிட்டார்.

முன்னதாக ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால், அக்டோபர் 2ஆம் தேதி மும்பையில் இருந்து நாடு தழுவிய போராட்டத்தை தொடங்கி, அதை இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்கு எடுத்து செல்வோம் என சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கே கூறினார்.

இந்த நிலையில் காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே ஒரு அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ளார்.

கேரள முன்னாள் தலைமை செயலாளர்

அந்த அறிக்கையில், 2016-ஆம் ஆண்டு, கேரளாவின் முன்னாள் தலைமை செயலாளரான ஜிஜி தாம்சனும், ஞானேஷ் குமாரும் ஒரே விமானத்தில் பயணம் செய்தபோது, 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட தங்களுக்கு விருப்பம் உள்ளதா என ஞானேஷ் குமார் கேட்டுள்ளார்.

மேலும் தாம்சனை, ஞானேஷ் குமார் மிகவும் வற்புறுத்தியதாகவும், ஆனால் தாம்சன் மறுத்துவிட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அபிஜீத் தீப்கே பதிவு

இதுகுறித்து அபிஜீத் தீப்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அவர் (ஞானேஷ் குமார்) சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதி செய்வார் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com