கடைக்கு வந்த மாணவிகளிடம் ஐ லவ் யூ சொன்ன உரிமையாளருக்கு பளார்... வீடியோ

கடையின் உரிமையாளர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டார்.கோபமடைந்த அந்த மாணவிகள் கடை உரிமையாளரை ரோட்டிற்கு இழுத்து வந்து அடிக்கிறார்கள்.
கடைக்கு வந்த மாணவிகளிடம் ஐ லவ் யூ சொன்ன உரிமையாளருக்கு பளார்... வீடியோ
Published on

ராஜஸ்தான் மாநிலம் திட்வானா பகுதியில் உள்ள குச்சுமான் நகரில் மொபைல் கடை உள்ளது. சில பள்ளி மாணவிகள் ரீசார்ஜ் செய்ய அங்கு சென்றனர்.

அப்போது அங்கிருந்த கடையின் உரிமையாளர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டார். போனை ரீசார்ஜ் செய்ய வந்த மாணவிகளிடம் "ஐ லவ் யூ" என்று கூறி அவர்களை தொந்தரவு செய்தார். அதுமட்டுமின்றி சிறுமிகளிடம் மோசமாக நடந்து கொண்டார்.

இதனால் கோபமடைந்த அந்த மாணவிகள் கடை உரிமையாளரை ரோட்டிற்கு இழுத்து வந்து அடிக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com