கியாஸ் சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 25 நாட்களாக குறைப்பு

பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சிலிண்டர் முன்பதிவு
சிலிண்டர் முன்பதிவு
Published on
Summary

எரிபொருள் வினியோக நிலைமை மேம்பட்டுள்ளதால் கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கு ஒரு முறை தான் சமையல் எரிவாயு முன்பதிவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.

ஈரான் - அமெரிக்கா போர் காரணமான வளைகுடா நாடுகளில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஏற்றுமதி தடைபட்டு உலக அளவில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டது. இந்தியாவிலும் இதன் தாக்கம் இருந்தது.

போர் தொடர்ந்தபோதிலும் அண்மை காலமாக எரிபொருள் தட்டுப்பாடு இன்றி சீராக கிடைக்கத் தொடங்கியுள்ளது.

எனவே வீட்டு உபயோக சிலிண்டர் முன்பதிவில் விதித்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தி வருகிறது.

அந்த வகையில் கிராமம், நகரப்பகுதிகள் என வேறுபாடின்றி ஒரே சீராக கியாஸ் சிலிண்டர் மறு நிரப்பலுக்கான (ரீபில்) முன்பதிவு இடைவெளிக் காலம் 25 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தளர்வு

முன்னதாக நெருக்கடியால் நகர்ப்புறங்களில் முன்பதிவு இடைவெளி 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்களாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால் கிராமங்களுக்கும் மறுநிரப்பலுக்கான இடைவெளிக்காலம் 45 இல் இருந்து 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதை நடைமுறைப்படுத்த கியாஸ் விநியோக நிறுவனங்களுக்கு பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தளர்வு குறித்த தகவலை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வினியோக நிலை மேம்பட்டு இருப்பதாலும், மறு நிரப்பல் நிலுவை கணிசமாக குறைந்து இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்

இதனால் கிராமப்புறங்களில் வசிப்போர் பதற்றம் தணிந்து நிம்மதியடைந்துள்ளனர்

X

Maalai Malar
www.maalaimalar.com