

அகாலி தளம் தலைவரும், பஞ்சாபின் முன்னாள் துணை முதலமைச்சருமான சுக்பீர் சிங் பாதல்மீது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாந்தேடு பகுதியில் உள்ள குருத்வாரா அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று நான்டெட்டில் உள்ள தக்த் ஸ்ரீ ஹசூர் சாஹிப் குருத்வாராவில் பாதல் தொழுகை முடித்து திரும்புகையில், மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார்.
தாக்குதல் நடந்தபோது, பாதலின் மனைவியும் அகாலி தல் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்சிம்ரத் கவுர் பாதலும் அவருடன் இருந்துள்ளார். இந்தத் தாக்குதலில் சுக்பீரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த கொட்டும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
தாக்குதல் நடத்தியவர் முதலில் வயிற்றில் குற்ற முயன்றதாகவும், சுக்பீரின் காவலர்கள் தடுத்ததில் அந்தக் குத்து கையில் விழுந்துள்ளது.
உடனடியாக சுக்பீர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தாக்குதல் நடந்த சிறிது நேரத்திலேயே மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இதுதொடர்பாக போலீசாரிடம் கேட்டறிந்து, தாக்குதல் நடத்தியவர் தொடர்பாக விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
முதற்கட்டமாக தாக்குதல் நடத்தியவர் நிஹாங் சீக்கியரான ஜஸ்பால் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அதே குருத்வாராவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். ஆனால் தாக்குதலுக்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை.