நாட்டிலேயே முதல் மாநிலம்.. முதியோரை பாதுகாக்க கேரளத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவின் சிறப்பம்சங்கள்!

நாட்டிலேயே முதல்முறையாக மூத்த குடிமக்கள் உரிமை பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கு விரிவான சட்டம் கொண்டு வந்த முதல் மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது.
கேரளம்
Published on: 
Summary

மூத்த குடிமக்களை பாதுகாக்கும் சட்ட மசோதா நேற்று கேரளம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

கேரளம் சட்டமன்றத்தில் கேரள மூத்த குடிமக்கள் (பராமரிப்பு மற்றும் உரிமைகள் பாதுகாப்பு) மசோதா, 2026 நிறைவேற்றப்பட்டது.

அக்டோபர் 13 அன்று சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டுவந்த பல திருத்தங்களை முதலமைச்சர் வி.டி. சதீசன் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து மசோதா ஒருமனதாக நேற்று நிறைவேற்றப்பட்டது.

மசோதாவின் அம்சங்கள்

மூத்த குடிமக்களை துன்புறுத்தல் மற்றும் சுரண்டலில் இருந்து பாதுகாக்கவும், முதியோர் பராமரிப்பு மையங்களை ஒழுங்குபடுத்தவும், சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான அணுகலை மேம்படுத்தவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

இது, முதியோர் பராமரிப்புக்கான சட்டக் கட்டமைப்பை நிறுவுவதையும் மூத்த குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது, முதியோரை துன்புறுத்துவது, மூத்த குடிமக்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக வைத்திருத்தல் மற்றும் பதிவு செய்யப்படாத முதியோர் பராமரிப்பு மையங்களை நடத்துதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதங்களை வழங்குகிறது.

முதல் மாநிலம்

நாட்டிலேயே முதல்முறையாக மூத்த குடிமக்கள் உரிமை பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கு விரிவான சட்டம் கொண்டு வந்த முதல் மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது. மசோதாவானது ஆளுநரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு இந்த மசோதா சட்டமாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com