வாக்காளர் பட்டியலில் இருந்து தந்தையின் பெயர் நீக்கம் - குழந்தைக்கு மறுக்கப்பட்ட பிறப்பு சான்றிதழ்

தந்தையின் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதால், பதிவுப் பணிகள் தடைபட்டுள்ளதாக அக்குழந்தையின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்
West Bengal
Published on: 

மேற்கு வங்காளத்தின் கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள கட்டமாரி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியரின் பச்சிளம் குழந்தைக்கு, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தின் (SIR) போது தந்தையின் பெயர் நீக்கப்பட்டதால் பிறப்புச் சான்றிதழ் மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோரின் குற்றச்சாட்டு

கட்டமாரி கிராமத்தைச் சேர்ந்த அமீனா காதுன் கடந்த செப்டம்பர் 2026-ல் தின்ஹாட்டா துணைக் கோட்ட மருத்துவமனையில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இந்த நிலையில் குழந்தை பிறந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழ் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்

குழந்தையின் தந்தையான அப்துல் ஹபீபின் பெயர், SIR திருத்தத்தின் போது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது பெற்றோர், மனைவி மற்றும் மூத்த சகோதரியின் பெயர்கள் பட்டியலில் உள்ளன. ​குழந்தையின் தந்தையின் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதால், பதிவுப் பணிகள் தடைபட்டுள்ளதாக அக்குழந்தையின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்

அதிகாரிகளின் மறுப்பு

பிறப்புச் சான்றிதழுக்குத் தேவையான வசிப்பிடச் சான்றிதழுக்காக பஞ்சாயத்து மற்றும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அணுகியபோது, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததைக் காரணம் காட்டி மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும், தன்னை வங்காளதேச நாட்டவர் எனக் கூறி தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறியதாக ஹபீப் குற்றம் சாட்டியுள்ளார். சாஹேப்கஞ்ச் வட்டார வளர்ச்சி அலுவலரும் இதே காரணத்தைக் கூறி மறுத்ததாகக் கூறப்படுகிறது.

னது பெயரை வாக்காளர் பட்டியலில் மீண்டும் சேர்க்கக் கோரி ஹபீப் தீர்ப்பாயத்தில் (tribunal) மேல்முறையீடு செய்துள்ளார், ஆனால் அது இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

குழந்தைக்கு சான்றிதழ் வழங்க வலியுறுத்தும் மனித உரிமைகள் அமைப்பு

குடிமை உரிமைகள் பாதுகாப்பு சங்கம்), குழந்தையின் பிறப்புச் சான்றிதழைத் தடுத்து நிறுத்துவதற்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பெற்றோரின் வாக்காளர் நிலையைக் காரணம் காட்டி, ஐ.நா. குழந்தை உரிமைகள் சாசனத்தின் பிரிவு 7-ன் கீழ் கிடைக்க வேண்டிய குழந்தையின் சட்டபூர்வ அடையாளத்தையும் பிறப்புப் பதிவையும் மறுக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளது.

அரசியல் விமர்சனம்

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் , SIR நடைமுறை விலக்கல் அரசியலுக்காகவும், மறைமுக NRC நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படுவதாக விமர்சித்துள்ளார்

X