வாட்ஸ்அப் திருமண அழைப்பிதழ் மூலம் நூதன மோசடி: ரூ. 10 லட்சம் இழந்த நபர்..!

வாட்ஸ்அப்பில் வந்த கோப்பை டவன்லோடு செய்தபோது, போன் ஹேக் செய்யப்பட்டது.
வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்
Published on: 
Summary

வாட்ஸ்அப்பில் வந்த திருமண அழைப்பிதழை நம்பி பதிவிறக்கம் செய்த குஜராத் நபர், சுமார் ரூ.10.02 லட்சத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் சூரத் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு வாட்ஸ்அப் மூலம் திருமண அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. உண்மையான திருமண அழைப்பிதழ் என நம்பிய அவர், அதனுடன் வந்த 'wedding invitation.APK' என்ற கோப்பை பதிவிறக்கம் செய்துள்ளார்.

இதையடுத்து, அவரது செல்போன் சைபர் குற்றவாளிகளின் கட்டுப்பாட்டுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி, அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10.02 லட்சத்தை மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.

சைபர் குற்றவாளிகளுக்கு வங்கி கணக்கை வழங்கியவர் கைது

இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்திய சூரத் சைபர் கிரைம் போலீசார், உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னூரைச் சேர்ந்த 28 வயதான தேவேந்திர மாலிக் என்பவரைக் கைது செய்துள்ளனர்.

சைபர் குற்றவாளிகளுக்கு தனது வங்கிக் கணக்கைப் பயன்படுத்த அனுமதித்து, மோசடி பணத்தைப் பெற்றுக் கொடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், பணத்தில் 20 சதவீதத்தை கமிஷனாக வைத்துக்கொண்டு, மீதமுள்ள தொகையை கூட்டாளிகளிடம் ஒப்படைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

* வாட்ஸ்அப்பில் வரும் தெரியாத APK கோப்புகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

* திருமண அழைப்பிதழ் என்ற பெயரில் வரும் சந்தேகத்திற்குரிய கோப்புகளைத் திறக்க வேண்டாம்.

* பண மோசடி நடந்தால் உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணைத் தொடர்புகொள்ளவும்.

* ஒரு சிறிய கவனக்குறைவு உங்கள் வங்கிக் கணக்கையே காலி செய்து விடலாம் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

X