வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இல்லையா? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

SIR முடிவடைந்த 20 மாநிலங்களில் சிறப்பு பதிவு முகாம் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்
Published on: 

இந்திய தேர்தல் ஆணையம் SIR பணியை மேற்கொண்டதன் விளைவாக கோடிக்கணக்கான வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. வாக்காளர் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6-ல் மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு இருந்ததாக தகவல் வெளியானது.

இதனால் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது.

சிறப்புப் பதிவு முகாம்

இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்புப் பதிவு முகாமை நடத்த ஒவ்வொரு மாநில தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பதிவு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. SIR முடிவடைந்த 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் வருகிற 10 மற்றும் 11-ந்தேதி சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் 18 வயது நிறைவான புதிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

வழக்கமான படிவம் 6-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்

அதேபோல், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தகுதியான வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு SIR பணியின் போது வழங்கப்பட்ட படிவம் 6 உடன் சேர்த்து வழங்கப்பட்ட உறுதிமொழி படிவத்தை பயன்படுத்த தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6 பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com