கடித்த பாம்பை டப்பாவுக்குள் அடைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டுவந்த முதியவர்

தன்னை கடித்த பாம்புடன் விரைவாக ஆஸ்பத்திரிக்கு முதியவர் சென்றதால், அவருக்கு டாக்டர்கள் விரைவாக சிகிச்சை அளிக்க முடிந்தது.
கடித்த பாம்பை டப்பாவுக்குள் அடைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டுவந்த முதியவர்
Published on: 
Summary

கேரளத்தில் 75 வயது முதியவர், நாகப்பாம்பு கடித்தபோது தைரியமாக அதை டப்பாவில் அடைத்து, ஆஸ்பத்திரிக்கு சென்றார். விரைவான சிகிச்சையால் அவர் உயிர் பிழைத்தார், மருத்துவர்கள் ஆபத்தை தாண்டியதாக தெரிவித்தனர்.

கேரளம் மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் அடூர் பதிநலம் மைல் பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர், தனது வீட்டு முற்றத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த துணிகளுக்குள் மறைந்திருந்த நாகப்பாம்பு, முதியவரின் கையில் கடித்தது.

தீவிர சிகிச்சை பிரிவு

இதையடுத்து தன்னை கடித்த பாம்பை அந்த முதியவர் தைரியமாக பிடித்து பிளாஸ்டிக் டப்பாவுக்குள் அடைத்தார். பின்பு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற சென்றார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவு டாக்டர்கள் உடனடியாக சிகிச்சை அளித்தனர்.

தன்னை கடித்த பாம்புடன் விரைவாக ஆஸ்பத்திரிக்கு முதியவர் சென்றதால், அவருக்கு டாக்டர்கள் விரைவாக சிகிச்சை அளிக்க முடிந்தது. இதனால் அந்த முதியவர் உயிர் பிழைத்தார். அவர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்றாலும், ஆபத்தாக கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

X