எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் - சுப்ரீம் கோர்ட் சாடல்

டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தியது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
supreme court
சுப்ரீம் கோர்ட்
Published on

டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தியது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.

'நீட்' தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று முன்தினம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.

இந்நிலையில், டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தியது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரின் வக்கீல் கேட்டுக் கொண்டார்.

ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டார். எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். உங்கள் நேரத்தையும் வீணாக்காதீர்கள் என்று அவர் தெரிவித்தார். தாக்குதல் காணொளிகளை எங்களுக்கு பார்க்க ஆர்வமும், நேரமும் இல்லை என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

முன்னதாக நேற்று இதே போன்ற ஒரு விவகாரத்தை அவசரமாக விசாரிக்க டெல்லி ஐகோர்ட்டும் மறுத்து, ‘நீதிமன்றத்தை இதில் இழுக்காதீர்கள்’ என்று கூறி இருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com