குடும்ப வன்முறை பெண்களின் மனநலத்தை பாதிக்கிறது - ஆய்வறிக்கையில் தகவல்

வன்முறையிலிருந்து விடுபடப் பொருளாதார சுதந்திரம் மட்டுமே போதுமானதல்ல என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Domestic violence
Published on: 

குடும்ப வன்முறை பெண்களின் மனநலத்தை கடுமையாகப் பாதிக்கிறது.வன்முறையிலிருந்து விடுபடப் பொருளாதார சுதந்திரம் மட்டுமே போதுமானதல்ல என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக ஆங்கில செய்தி ஊடகம் வெளியிட்டுள்ளது.

இந்தச் செய்தியில், குடும்ப வன்முறை என்பது வெறும் சமூக அல்லது சட்டப் பிரச்சனை மட்டுமல்லாமல், அது ஒரு தீவிரமான மனநல நெருக்கடியாகவும் மாறியுள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வன்முறையை சகித்து கொள்வதற்கான காரணம்

பொருளாதார சுதந்திரம் பெண்களுக்குத் தன்னம்பிக்கையையும், வன்முறையை எதிர்க்கும் திறனையும் அளித்தாலும் அது மட்டுமே போதுமானதல்ல. சமூகக் கட்டமைப்புகள், குடும்ப அழுத்தம், குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலை மற்றும் சமூக அவமானத்திற்குப் பயப்படுதல் ஆகியவை பல பெண்களை வன்முறை உறவுகளிலேயே சிக்க வைப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

உணர்வு ரீதியான துன்புறுத்தல் அதிகரிப்பு

பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெண்களிடையே உடல் ரீதியான வன்முறை அதிகமாக உள்ள நிலையில், படித்த மற்றும் பொருளாதார சுதந்திரம் கொண்ட பெண்களிடையே உணர்ச்சி ரீதியான துன்புறுத்தல் (Emotional abuse) மற்றும் புறக்கணிப்பு ஆகியவை அதிகரித்து வருகின்றன. இத்தகைய போக்கை வன்முறை என்று அடையாளம் காணவே அவர்களுக்கு நீண்ட காலம் ஆவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

காவல்துறை தலையீடு மற்றும் மருத்துவப் பரிசோதனை போன்ற நடைமுறைகள் பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதால், பலர் புகார் அளிக்க முன்வருவதில்லை என்று சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

தேசிய மகளிர் ஆணையம் கூறுகையில்

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் விஜயா ரஹத்கர் சமீபத்தில் ஆங்கில செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தங்களது ஆணையத்திற்கு வரும் புகார்களின் பட்டியலில் குடும்ப வன்முறை முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பெற்றோருக்கு இடையிலான வன்முறையைப் பார்த்து வளரும் குழந்தைகளும் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர். இது அவர்களின் படிப்பு, கவனம் செலுத்தும் திறன் மற்றும் எதிர்கால உறவுகளில் ஆரோக்கியமற்ற தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

குடும்ப வன்முறைன் அல்லது மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் பெண்கள் அரசு உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

X