கன்னடர்களை புறக்கணிக்கும் தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை

வேறு பகுதிகளில் குறைந்த சம்பளத்துக்கு ஆட்களை நியமனம் செய்து கொள்கிறார்கள்.
டி.கே.சிவக்குமார்
Published on: 
Summary

பெங்களூருவில் கன்னடர்களுக்கு வேலை வழங்குவதில் பாரபட்சம் காட்டினாள் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் டி.கே. சிவகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடக தலைநகர் பெங்களூருவை சேர்ந்த ஒரு இளம்பெண் அண்மையில் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

வைரல் வீடியோ

அதில் பேசும் அவர், "பெங்களூருவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தெலுங்கு. தமிழ் மொழி பேசுவோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.

சுயவிவரத்தில் தாய்மொழி கன்னடம் என்று குறிப்பிட்டால் வேலை கிடைப்பது இல்லை. பெங்களூருவில் உள்ள கல்லூரிகளில் வளாக ஆள் எடுப்பு பணியை மேற்கொள்வது இல்லை.

வேறு பகுதிகளில் குறைந்த சம்பளத்துக்கு ஆட்களை நியமனம் செய்து கொள்கிறார்கள். இதனால் கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது இல்லை. இந்த பிரச்சினைக்கு கர்நாடக அரசு தீர்வு காண வேண்டும்" என கூறியிருந்தார்.

கவலை

இதையடுத்து இணையத்தில் பலரும் தாங்களும் இந்த பாரபட்சத்தை எதிர்கொண்டதாக புலம்பினர். கன்னட அமைப்புகளும் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தன.

இந்த சூழலில் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளார்.

டி.கே. சிவகுமார்

அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இதுகுறித்து வெளியிட்ட பதிவில், “பெங்களூருவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலை கிடைப்பது இல்லை என்று புகார்கள் வருவது வருத்தம் அளிக்கிறது.

கர்நாடகத்தில் கன்னடர்களே உயர்ந்தவர்கள். கன்னடர்களின் உரிமை, வாய்ப்புகளை புறக்கணிப்பதை எக்காரணம் கொண்டும் அரசு அனுமதிக்காது.

உலகம் பெங்களூருவை தகவல் தொழில்நுட்பத்தின் தலைநகராக பார்க்கிறது.

கன்னடர்களின் திறமை மீது அபாரமான பெருமை உள்ளது. கன்னடர்களை தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டு புறக்கணிப்பது தெரியவந்தால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். கன்னடர்களின் நலனை காக்க அரசு தயாராக உள்ளது.” என்று உறுதியளித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com