

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 2% உயர்த்தி, அடிப்படை ஊதியத்தில் 60% ஆக அதிகரிப்பதற்கு ஏப்ரல் மாதம் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பும் வந்துள்ளது.
தற்போது அமலில் உள்ள 60% அகவிலைப்படியானது 3% அதிகரிக்கப்பட்டு 63% ஆக உயரும். இந்த உயர்வு ஜூலை 1, 2026 முதல் கணக்கிட்டு நடைமுறைப்படுத்தப்படும். ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படியை அமைச்சரவை மாற்றியமைத்து வருகிறது.