

மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என உண்ணாவிரத போராட்டம் நடத்தும் ஜராங்கே உடன் மகாராஷ்டிரா அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கே வலியுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி மனோஜ் ஜராங்கே கடந்த 14 நாட்களாக ஜால்னா மாவட்டத்தில் உள்ள அந்தவாலி சாரதி என்ற கிராமத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். அவரை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கே சந்தித்தார்.
மகாராஷ்டிர அரசு மனோஜ் ஜராங்கே உடன் பேச்சுவார்த்தை நடத்தி அவருடைய கோரிக்கையை புரிந்து கொள்ள வேண்டும். அவரை வெளியேற்றும் வகையில் தொடுவதற்கு முயற்சிக்கக் கூடாது. ஏனென்றால், இது மகாராஷ்டிரா. அப்படி தொட்டால் விளைவுகள் ஏற்படும்.
மகாராஷ்டிரா முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?. அவர்களுடைய குழந்தைகளை படிப்பிற்காக வெளிநாட்டிற்கு அனுப்புகிறார்கள். ஏனென்றால், இங்குள்ள பள்ளிகள் அந்த அளவிற்கு தரமானதாக இல்லை.
மனோஜ் ஜராங்கேயை நீண்ட காலம் பட்டினி கிடக்க வைக்க அரசு விரும்புகிறதா? நகைச்சுவை நடிகர்களைச் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு நேரம் இருக்கிறது, ஆனால் ஜராங்கேயிடம் பேச யாரும் வரவில்லை.
சோனம் வாங்சுக்கிடம் நடந்ததைப் போல, மனோஜ் ஜரங்கேவிடமும் அதைச் செய்ய முயற்சிக்கக் கூடாது. இது மகாராஷ்டிரா. இங்கே அது பலிக்காது. யாராவது மனோஜ் ஜரங்கையைத் தொட்டால், ஒட்டுமொத்த மகாராஷ்டிராவும் இங்கு (அந்தர்வாலி சரதிக்கு) திரண்டு வரும்.
மனோஜ் ஜராங்கேவை அவர்கள் சாக விடப்போகிறார்களா? அரசு, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் இங்கு வந்து மனோஜ் ஜராங்கேவிடம் பேசி, அவரது கோரிக்கைகளைக் கேட்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், அவர் தனக்காக எதையும் கேட்கவில்லை.
பிரதமேஷ் தேஷ்முக்கைப் (மகாராஷ்டிரா அரசு நடத்தும் தேர்வுக்காக படித்த தற்கொலை செய்து கொண்ட இளைஞர்) போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது என்று அரசு விரும்பினால், MPSC மற்றும் மனோஜ் ஜராங்கே எழுப்பியுள்ள பிரச்சினைகளுக்கு அது ஒரு தீர்வைக் காண வேண்டும். அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்க அரசால் இயலாத சூழலில், அவர் இடஒதுக்கீட்டைக் கோருகிறார்.
மாணவர்களுக்குச் சிறந்த பள்ளிகள், தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் ஒரு கிராமத்தைக் காட்டுங்கள். இத்தகைய வசதிகளைச் செய்து தருவதில் அரசு தோல்வியடைந்துவிட்டது; அதனால்தான் மனோஜ் ஜரங்கே போராடிக்கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.