மணிப்பூர் கலவரத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா ?

ராஜினாமா தொடர்பாக முதல்வர் பிரேன் சிங் ஆளுநரை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ராஜினாமா கடிதத்தை அவரது ஆதரவாளர்கள் கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர் கலவரத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா ?
Published on

மணிப்பூரில் கடந்த 2 மாதத்திற்கும் மேலான வன்முறை வெடித்து வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுள்ளனர்.

இந்நிலையில், மணிப்பூர் மாநில கலவரத்திற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ஆளுநரை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், முதல்வர் பிரேன் சிங் வீட்டிற்கு முன்பு திரண்ட ஆதரவாளர்கள் மற்றும் பெண்கள் ராஜினாமா செய்ய வேண்டாம் என முதல்வர் பிரேன் சிங்கிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜினாமா கடிதத்தை அவரது ஆதரவாளர்கள் கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com