

ராஜஸ்தான் மாநிலம் மீரட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், பிளிங்கிட் நிறுவத்தின் டெலிவரி செய்யும் நபர் (Delivery agent), பொருள் ஒன்றை ஒரு வீட்டில் டெலிவரி செய்வதற்காக கொண்டு செல்கிறார். அவர் பெல்லை அழுத்தியதும், வீட்டில் இருந்து வாலிபர் ஒருவர் வருகிறார். இவர் டெலிவரி நபருடன் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பின்னர் திடீரென டெலிவரி செய்ய வந்த நபரின் செல்போனை பறித்துக் கொள்கிறார். அதோடு சரமாரியாக தாக்குகிறார்.
அப்போது, அதேவீட்டில் இருந்து பெண் ஒருவர் வெளியே வருகிறார். அவர் இருவரையும் சமாதானம் செய்யும் எந்த வகையிலான முயற்சியிலும் ஈடுபடவில்லை. பின்னர், அந்த நபரை வாலிபர் அவரை வீட்டிற்குள் இழுத்துச் சென்று அடித்து உதைக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இந்த வீடியோ காவல்துறையின் பார்வைக்கு எட்ட, இது குறித்து விசாரணை நடத்தி டெலிவரி செய்ய வந்த நபர், மற்றும் வாலிபர் யார் என்பதை கண்டுபிடித்தனர். பின்னர், டெலிவரி செய்ய வந்த நபர் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க, போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
டெலிவரி செய்யும் நபர்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டு, சொற்ப வருமானத்திற்காக கஷ்டப்பட்டு வருகின்றனர். 5 நிமிடம், 10 நிமிடம் லேட்டிற்காக தாக்குதல் நடத்தினால் அது மோசமான செயலாகும் என இணையதள வாசிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.