தேர்தலில் முறைகேட்டை திசைதிருப்பவே தொகுதி மறுவரையரை - ராகுல் காந்தி

தேர்தலில் முறைகேடு செய்ய புதிய வழிகளைத் தேடுகின்றனர்.
ராகுல்
Published on: 

தொகுதி மறுவரையரை மசோதா தொடர்பாக டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோரை ராகுல் கடுமையாக விமர்சித்தார்.

"ஆளும் கட்சி இந்தியாவை ஒரு சர்வாதிகார நாடாக மாற்ற அனுமதிக்கப்படாது. தொகுதி மறுவரையறை நடவடிக்கை ஜனநாயகத்தின் அடித்தளத்தையே தகர்க்கும்.

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், தேர்தல் முறைகேடுகள் குறித்த விசாரணையிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்கான ஒரு புதிய தந்திரமே இந்தத் தொகுதி மறுவரையறை நடவடிக்கை. தேர்தல் முறையின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது. மோடி, அமித் ஷா மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோர் தேர்தலில் முறைகேடு செய்ய புதிய வழிகளைத் தேடுகின்றனர்.

எங்கும், எந்த நேரத்திலும் தேர்தலில் முறைகேடு செய்ய முடியும் என்ற அவர்களின் நம்பிய நாட்கள் முடிந்துவிட்டன.

அவர்களால் இப்போதும் முறைகேடு செய்ய முடியும், ஆனால் அது மக்களுக்குத் தெரியும்.

இந்தியாவில் 80 சதவீத மக்களும், ஜென் இசட் தலைமுறையைச் சேர்ந்தவர்களில் கிட்டத்தட்ட 100 சதவீதத்தினரும், நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோர் தேர்தலில் முறைகேடு செய்வதாக நம்புவதாக எங்கள் கணக்கெடுப்பு காட்டுகிறது. இப்போது இந்த மூவரும் ஒரு புதிய திட்டத்துடன் வந்துள்ளனர்" என்றார்.

X