டெல்லி: லாரியின் எரிவாயு தொட்டி வெடித்து விபத்து - ஒருவர் பலி... 6 பேர் கவலைக்கிடம்!

6 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லி: லாரியின் எரிவாயு தொட்டி வெடித்து விபத்து - ஒருவர் பலி... 6 பேர் படுகாயம்!
Published on

டெல்லியின் புறநகர் பகுதியான திக்ரி கலானில் உள்ள ஒரு சிஎன்ஜி நிலையத்திற்கு லாரி ஒன்று எரிவாயு நிரப்ப வந்துள்ளது. லாரியின் எரிபொருள் தொட்டியில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக எரிபொருள் தொட்டி வெடித்துள்ளது.

இந்த விபத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த மணீஷ் (25) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வெடிவிபத்து நடந்த நேரத்தில் அருகில் நின்றுகொண்டிருந்த மேலும் ஆறு பேர் காயமடைந்ததாகவும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெடிப்புக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.

விபத்து தொடர்பாக 3.37 மணிக்கு தங்களுக்கு தகவல் கிடைத்ததாக டெல்லி தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

வெடிவிபத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com