50% வாகனங்கள் தடை, வீட்டில் இருந்து வேலை, வாகன கட்டுப்பாடு: காற்று மாசுபடுவதை தடுக்க டெல்லியில் கட்டுப்பாடு அமல்

டெல்லியில் காற்று மாசுபாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டெல்லி கார் மாசுபாடு
டெல்லி கார் மாசுபாடு
Published on: 

டெல்லி உள்பட வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், குளிர் காலம் தொடங்க இருக்கிறது. டெல்லி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் (Delhi-NCR) குளிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் காற்றுமாசுபாடு ஏற்படும். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். பொதுமக்களும் வெளியில் வர முடியாத நிலை ஏற்படும்.

இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை அதிகாரிகள் விதித்துள்ளனர். இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

பழைய வாகனங்களுக்கு தடை

டெல்லிக்கு வெளிப்புறம் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு, பிஎஸ்-VI எமிசன் தரநிலையை எட்டாத வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 லட்சம் பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் நொய்டா, குருகிராம், பரிதாபாத், காசியாபாத்தில் இருந்து டெல்லிக்கு வருது தடுக்கப்படும்.

எனினும் எலக்ட்ரிக் வானங்கள், சிஎன்ஜி வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்ற எம்ர்ஜென்சி வாகனங்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான வேலை

மாசுகளை உருவாக்கும் கட்டுமான இடிப்பு, வெளிப்புற பொது கட்டுமான செயல்களுக்கு நவம்பர் 1-ந்தேதி முதல் ஜனவரி 31-ந்தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது அரசு பொது கட்டமைப்பு போன்ற திட்டங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

50 சதவீதம் வீட்டில் இருந்து வேலை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 50 சதவீதம் பணியாளர்களுடன் வேலை பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு கட்டாயம் WFH வழங்க வேண்டும்.

அரசு அலுவலக வேலை நேர மாற்றம்

போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு நிறுவனங்களில் வேலை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநகராட்சி அலுவலகங்கள் காலை 8.30 முதல் மாலை 5 மணி வரை இயங்கும். அரசு அலுவலகங்கள் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படும்.

பெரும்பாலான இடங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. PUC சான்றிதழ் இல்லை என்றால் எரிபொருள் வழங்கக் கூடாது என்று பெட்ரோல் பங்க்-களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X