டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் தீ விபத்து

மத்திய செயலகம் செய்யப்பட்டு வரும் நார்த் பிளாக் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் தீ விபத்து
Published on: 
Summary

நாடாளுமன்றத்தில் உள்ள நார்த் பிளாக்கில் தீ விபத்து ஏற்பட்டது.

டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மத்திய செயலகம் செய்யப்பட்டு வரும் நார்த் பிளாக் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நார்த் பிளாக்கில் பகுதியிலிருந்து இருந்து கரும்புகை எழுவதாக டெல்லி தீயணைப்பு துறையினருக்கு இன்று காலை 11.10 மணியளவில் தகவல் அளிக்கப்பட்டது.

தீ அணைப்பு

இதைத்தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் 6 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தனர்.

11.25 மணியளவில் நார்த் பிளாக்கில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சேதம்

நார்த் பிளாக் பகுதி கட்டடத்தில் சில பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வந்ததாகவும் அங்கு சிறிய தீ விபத்து ஏற்பட்டதாகவும், அது உடனே அணைக்கப்பட்டதாகவும் டெல்லி தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

மேலும் இதில் உயிர் சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர். பொருட்சேதம் குறித்தோ, விபத்தில் ஏதும் ஆவணங்கள் சேதமானதா என்பது குறித்தோ இன்னும் தகவல் வெளியாகிவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com