டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு அல் கொய்தா தான் காரணம் - ஐநா பரபரப்பு அறிக்கை

2014 இல் இந்த துணைப்பிரிவை அல் கொய்தா தொடங்கியுள்ளது.
டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு
டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு
Published on

இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டெல்லி சென்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் அல் கொய்தாவின் கை இருப்பதாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கண்காணிப்பு குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அல் கொய்தா

கடந்த ஆகஸ்ட் 10 வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், "இந்திய துணை கண்டத்தில் அல் கொய்தாவின் ஒரு துணைப் பிரிவு, பிராந்திய பயங்கரவாத அமைப்பாக வளர்ந்து வருகிறது. அது ஒரு மத்திய தலைமையின் கீழ் இல்லாமல் தனி தனியே ஆங்காங்கே சிறு சிறு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.

நவம்பர் 2025 இல் செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு தாக்குதலை அல் கொய்தாவின் இந்த துணை அமைப்பே மேற்கொண்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அமைப்பின் பெயர் "அன்சார் கஸ்வத்உல் ஹிந்த்" (AQIS) என ஐநா கவுன்சில் குழு குறிப்பிட்டுள்ளது. 2014 இல் இந்த துணைப்பிரிவை அல் கொய்தா தொடங்கியுள்ளது.

இந்த அமைப்பு தற்போது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் (சில பகுதிகள்) உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லைகளை கடந்து இயங்கி வருவதால் இவ்வமைப்பு ஆபத்தானது என அறிக்கை வகைப்படத்தியுள்ளது.

என்ஐஏ உள்ளிட்ட இந்திய முகமைகள் நடத்திய விசாரணையில் செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு தாக்குதல் பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு என கூறப்பட்ட நிலையில் ஐநாவின் இந்த மாறுபட்ட அறிக்கை விவாதத்தை தூண்டியுள்ளது.

செங்கோட்டை கார் குண்டுவெடிப்பும் என்ஐஏ விசாரணையும்

2025, நவம்பர் 10, மாலை 7 மணியளவில் டெல்லி செங்கோட்டை வெளியே ஹூண்டாய் i20 கார் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் அப்பகுதியில் இருந்த 11 பேர் உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்தவனும் உயிரிழந்தான்.

அவன் பெயர் உமர் இ நபி என அடையாளம் காணப்பட்டது. இவனுக்கு பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பவுடன் தொடர்பிருந்ததாக கூறப்பட்டது.

இவன் பஞ்சாபில் அல் பலா என்ற பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தவன் எனவும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த பல்கலைக்கழகமும் பல முறைகேடுகளில் ஈடுபட்டதாக தெரியவந்தது.

செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, 11 குற்றவாளிகளுக்கு எதிராக 7,500 குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்திருந்தது. இந்தக் குற்றப்பத்திரிகையை வரும் ஆகஸ்ட் 27 அன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com