டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு - தீபாவளியை தொடர்ந்து மிகவும் மோசமான தரக்குறியீடு பதிவு

தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள 15 கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் ஆய்வு செய்யப்பட்டது.
Delhi AQI
Published on: 
Summary

டெல்லியில் தீபாவளியை தொடர்ந்து காற்று மாசுபாடு அதிகரித்து, ஒட்டுமொத்தமாக மிகவும் மோசமான அளவில் 366 ஆக பதிவாகியுள்ளதாக காற்றின் தரக் குறியீடு (AQI) தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட்டதை தொடர்ந்து, அதிகமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

இதன் காரணமாக பல மாநிலங்களில் காற்று மாசுபாடு அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

தேசிய தலைநகர் டெல்லியில், 15 கண்காணிப்பு நிலையங்கள் காற்றின் தரத்தை ஆய்வு செய்தபோது, 400 க்கு மேல் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

காற்று தரக் குறியீடு

டெல்லியில் இன்று காலை 6 மணி நிலவரப்படி, அதன் ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு 366 ஆக இருந்ததாகவும், இது மிகவும் மோசமானது என்றும் காற்றின் தரக் குறியீடு தெரிவித்துள்ளது.

டெல்லியின் பல மாவட்டங்களில் மிக அடர்த்தியான பனிமூட்டம் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, காற்றின் தரம் மிகவும் மோசமாக காணப்பட்டது.

டெல்லியில் 15 பகுதிகள்

டெல்லியில் சோனியா விஹார் 449 ஆகவும், புராரி கிராசிங் 445 ஆகவும், விவேக் விஹார் 441 ஆகவும் பதிவாகியுள்ளன.

அதேபோன்று ஜஹாங்கிர்புரியில் 439 ஆகவும், டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் 437 ஆகவும் பதிவாகியுள்ளது.

ரோகினியில் 435, டிடியூ-வில் 431, பவானாவில் 424, சாந்தினி சௌக் மற்றும் பட்பர்கஞ்ச் இரண்டு பகுதிகளில் 418 ஆக காற்றின் தரம் பதிவாகியுள்ளன.

முண்ட்காவில் 413, NIH நரேலா மற்றும் பஞ்சாபி பாக் ஆகிய பகுதிகளில் 408 ஆகவும் காற்றின் தரம் பதிவாகியுள்ளது.

X