டெல்லியில் திறந்தவெளியில் குப்பைகளை எரித்தால் ரூ.10,000 அபராதம் விதிக்க முடிவு

உற்பத்தியாளர்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
டெல்லி - குப்பைகளை எரித்தால் அபராதம்
டெல்லி - குப்பைகளை எரித்தால் அபராதம்
Published on: 
Summary

டெல்லியில் திறந்தவெளியில் கழிவுகளை எரித்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.

டெல்லியில் கழிவுகளைத் திறந்தவெளியில் எரித்தால் ரூ.10,000 அபராதம் விதிக்க டெல்லி மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

வீட்டுக் கழிவுகளைத் தரம் பிரிக்காமல் விடுவதற்கும், பொது இடங்களில் கழிவுகளைக் கொட்டுவதற்கும் படிப்படியான அபராத முறையை முன்மொழியும் விதிகளுக்கு டெல்லி மாநகராட்சி ஒப்புதல் அளித்தது. இறுதி ஒப்புதலுக்கு பின் இவை நடைமுறைக்கு வரும்.

அபராதம்

புதிய விதிகளின்படி, திடக்கழிவுகளைத் திறந்தவெளியில் எரித்தால் ரூ.10,000, பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.1,000, கழிவுகளை முறையாகக் கையாளாத வீடுகள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

மேலும், 5,000 சதுர மீட்டருக்கும் குறைவான பரப்பளவு கொண்ட திருமண மண்டபங்களுக்கு ரூ.15,000, சினிமா அரங்குகள் மற்றும் கிளப்புகளுக்கு ரூ.7,500, மற்ற வணிகம் அல்லாத நிறுவனங்களுக்கு ரூ.1,000 அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானக் கழிவுகளை முறையற்றுக் கொட்டினால் குடியிருப்புகளுக்கு ரூ.2,000 மற்றும் வணிகச் சொத்துக்களுக்கு ரூ.10,000 அபராதமும், குப்பை கொட்டும் சரக்கு வாகனங்களுக்கு ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படும்.

அதேபோல், கழிவுகளை முறையாகக் கையாளாத உணவகங்களுக்கு ரூ.30,000, ஹோட்டல்களுக்கு ரூ.75,000 மற்றும் பேக்கேஜிங் கழிவுகளைச் சேகரிக்கும் முறையை அமைக்காத உற்பத்தியாளர்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ம் தேதி இந்த அபராதத் தொகையை 5% உயர்த்தவும் இந்த விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து, காற்றின் தரக் குறியீடும் அதிகரித்து வரும் வேளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

X