தாயார் மறைவு: அகமதாபாத் விரைந்தார் பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று காலை பிரதமர் மோடியின் தாயார் காலமானார்.
தாயார் மறைவு: அகமதாபாத் விரைந்தார் பிரதமர் மோடி
Published on

அகமதாபாத் :

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100), திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், பிரதமர் மோடி அங்கு விரைந்து சென்று தாயாரைப் பார்த்தார்.

அவருக்கு அளிக்கப்படுகிற சிகிச்சை குறித்தும் டாக்டர்களிடம் விசாரித்து அறிந்தார். ஹீராபென் மோடியின் உடல் நலம் தேறி வருவதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி பிரதமர் மோடியின் தாயார் காலமானார். பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளத்தில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்காக செல்ல இருந்தார்.

இந்த நிலையில் தாயார் ஹீராபென் மறைவையடுத்து பிரதமர் மோடி அகமதாபாத்துக்கு விரைகிறார். மேற்கு வங்காளத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com