

அபிஜித் தீப்கேவின் பாட்டி காலமான நிலையில் டெல்லி காவல்துறையால் கைது செய்ப்பட்ட தீப்கே தற்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை என சிஜேபியினர் தெரிவித்துள்ளனர்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கேவின் வீட்டில் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று அவரது பாட்டி காலமானார். அதே நேரத்தில், அபிஜித் தீப்கே டெல்லியில் காவல்துறை காவலில் இருப்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
மறைவு
மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தின் சந்துக் பிம்ப்ரி கிராமத்தில் வசித்து வந்த அபிஜித்தின் தந்தைவழி பாட்டி, சில காலமாக நாள்பட்ட நோய் மற்றும் வயது தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்து, நேற்று அவர் உயிர் நீத்தார். இந்தச் செய்தி வெளிவருவதற்குள், அபிஜித் டெல்லியில் காவல்துறை காவலில் இருந்தார்.
வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக் கோரி ஜந்தர் மந்தரில் போராட்டத்திற்கு சிஜேபி அழைப்பு விடுத்துள்ளது.
அபிஜித் தீப்கே, கட்சியின் மற்ற இரண்டு உறுப்பினர்களான சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கலா ஆகியோருடன் இதில் பங்கேற்பதற்காக மும்பையிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்றிருந்தார்.
இருப்பினும், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய உடனேயே, டெல்லி காவல்துறை விமானத்தினுள் நுழைந்து மூவரையும் கைது செய்தது.
டெல்லியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட 7000 பேர் வரை கைது செய்யப்பட்டு முன்இரவில் விடுவிக்கப்பட்டனர்.
போராட்டத்திற்கு கிளம்பும்போதே கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்களும் விடுதலை ஆகினர்.
ஆனால் விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்ட தீப்கே, மற்றும் இரு நிர்வாகிகள் இன்னும் போலீஸ் காவலில் உள்ளனர்.
அவர்கள் எங்கே வைக்கப்பட்டிருக்கின்றனர் என்றே தெரியவில்லை என்றும் அவர்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை என்றும் சிஜேபியினர் குற்றம்சாட்டியுள்ளனர். அவர்களை காணவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாட்டி காலமான இக்கட்டான நேரத்தில் தீப்கே குடும்பத்தினருடன் இருக்க இயலாததால் அவரது ஆதரவாளர்களிடையே என்ற கவலை நிலவுகிறது. அவரை இறுகி காரியங்களுக்கு செல்ல டெல்லி காவல்துறை அனுமதிக்குமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.