போலி டிராபிக் அபராத மெசேஜ்: சைபர் மோசடியில் ரூ. 12.6 லட்சம் இழந்த ஐ.டி. ஊழியர்

போக்குவரத்து விதியை மீறியதாக கூறி மெசேஜ் அனுப்பி மோசடி.
சைபர் கிரைம்
சைபர் கிரைம்
Published on: 
Summary

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் செலுத்த வேண்டும் என செல்போனுக்கு வந்த போலி இ-சலான் (E-Challan) குறுஞ்செய்தியை நம்பிய நபர், ரூ.12.6 லட்சத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாகனத்தின் மீது போக்குவரத்து விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அபராதத்தைச் செலுத்த வேண்டும் என்றும் மோசடி கும்பல் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. இந்தச் செய்தி அரசு போக்குவரத்துத் துறையிலிருந்து வந்ததுபோல நம்பகமாகத் தோன்றியதால், பாதிக்கப்பட்ட நபர் அதில் கொடுக்கப்பட்டிருந்த லிங்கை கிளிக் செய்துள்ளார்.

APK ஃபைலை பதிவிறக்கம் செய்ய தூண்டுதல்

அதனைத் தொடர்ந்து, இ-சலான் விவரங்களைப் பார்க்கும் செயலி எனக் கூறி APK கோப்பைப் பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளனர். அந்தச் செயலிக்கு செல்போனின் அனுமதிகளை வழங்கியதும், மோசடி கும்பல் அவரது செல்போனைத் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தும் வசதியைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இதனைப் பயன்படுத்தி வங்கி விவரங்கள் மற்றும் OTP போன்ற முக்கியத் தகவல்களைத் திருடி, வங்கிக் கணக்கிலிருந்து ரூ.12.6 லட்சத்தை மோசடியாகப் பரிமாற்றம் செய்துள்ளனர்.

பொதுமக்கள் கவனத்திற்கு:

* வாட்ஸ்அப் அல்லது SMS மூலம் வரும் சந்தேகத்திற்குரிய இ-சலான் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.

* தெரியாத APK கோப்புகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

* அபராத விவரங்களை https://echallan.parivahan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே சரிபார்க்கவும்.

* பணம் மோசடி செய்யப்பட்டால் உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணைத் தொடர்புகொள்ளவும்.

* ஒரு சிறிய அபராதத்தைச் செலுத்த முயற்சித்து லட்சக்கணக்கான ரூபாயை இழக்க நேரிடலாம். எனவே, வாகன ஓட்டிகள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

X