அடுத்த ஆண்டுக்கான கியூட் இளங்கலை தேர்வு மே 21-ம் தேதி தொடக்கம்

கியூட் இளங்கலை தேர்வு தேதியை பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்துக்குள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.
கியூட் தேர்வு
கியூட் தேர்வு
Published on

புதுடெல்லி:

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்துகிறது.

இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான இளங்கலை படிப்புக்கான கியூட் தேர்வு தேதியை பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது.

அதன்படி, அடுத்த ஆண்டு மே மாதம் 21 முதல் 31ம் தேதி வரை கியூட் இளங்கலை தேர்வுகள் நடைபெறும்.

ஜூன் மாதத்தில் கியூட் முதுநிலை தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்துக்குள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com