

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஹர்ஜித் சிங்கை (வயது 50) மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தப்பி சென்றனர்.
இந்த நிலையில் போலீஸ் சோதனை சாவடி ஒன்றில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் நிறுத்துமாறு சைகை செய்தனர். ஆனால் அவர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.
விசாரணையில் சுட்டு கொல்லப்பட்டவர் அமிர்தசரசின் முல்சக் பகுதியைச் சேர்ந்த தீபக் சிங் என்பதும், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஹர்ஜித் சிங்கை கொன்ற 2 பேரில் ஒருவர் என்பதும் தெரியவந்தது.
தீபக் சிங்குக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவருடன் தொடர்பு இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.