வெள்ளத்தில் சிக்கிய வாலிபர்: துப்பட்டாவை வீசி காப்பாற்றிய புதுமணப் பெண்கள்- வீடியோ

வெள்ளத்தில் சிக்கிய வாலிபரை பெண்கள் துணிச்சலாக காப்பாற்றினர்.
வெள்ளத்தில் சிக்கிய வாலிபர்
வெள்ளத்தில் சிக்கிய வாலிபர்
Published on

இமாச்சல பிரதேச மாநிலம் பார்முலா பகுதியில் காகியரா-தனுஹாட்டி சாலையில் திடீரென வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் சிக்கிக் கொண்டார். இரு சக்கர வாகனத்துடன் பள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் நிலையில் தவித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக காரில் இரு புதுமணத் தம்பதிகள் வந்தனர். அவர்கள் அந்த வாலிபர் சிக்கிக் கொண்டதை பார்த்து காரை நிறுத்தினர். அவர்கள் காரில் கயிறு போன்ற ஏதும் இல்லை. அந்த நேரத்தில் இரண்டு புதுமணப் பெண்களுக்கு சாதுர்யமான யோசனை வந்தது. அவர்கள் அணிந்திருந்த துப்பாட்டாவை கழற்றி இரண்டையும் ஒன்றாக கட்டி அந்த வாலிபரை நோக்கி வீசினர். ஒருபக்கத்தை பலமாக பிடித்துக் கொண்டனர். மறுமுனையில் அந்த வாலிபர் துப்பட்டாவை பிடித்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து வாலிபர் அந்த துப்பாட்வை பிடித்து பாதுகாப்பாக வெள்ளத்தில் இருந்து தப்பித்தார். இந்த வீடியோ வெளியாகி வைரலானது.

இந்த வீடியோவைப் பார்த்து இரு பெண்களை இணையதளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com