

பெங்களூரு :
கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 320 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு இருந்தது. இதில் புதிதாக 20 ஆயிரத்து 505 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 8,850 பேர் பாதிக்கப்பட்டனர். பாகல்கோட்டையில் 303 பேர், பல்லாரியில் 390 பேர், பெலகாவியில் 1,060 பேர், பெலகாவி புறநகரில் 195 பேர், பீதரில் 190 பேர், சாம்ராஜ்நகரில் 364 பேர், சிக்பள்ளாப்பூரில் 311 பேர், சிக்கமகளூருவில் 89 பேர், சித்ரதுர்காவில் 208 பேர், தட்சிண கன்னடாவில் 412 பேர், தாவணகெரேயில் 160 பேர், தார்வாரில் 633 பேர், கதக்கில் 131 பேர், ஹாசனில் 590 பேர் பாதிக்கப்பட்டனர்.
ஹாசனில் 411 பேர், கலபுரகியில் 337 பேர், குடகில் 543 பேர், கோலாரில் 300 பேர், கொப்பலில் 220 பேர், மண்டியாவில் 579 பேர், மைசூருவில் 1,209 பேர், ராய்ச்சூரில் 165 பேர், ராமநகரில் 79 பேர், சிவமொக்காவில் 715 பேர், துமகூருவில் 762 பேர், உடுப்பியில் 542 பேர், உத்தர கன்னடாவில் 595 பேர், விஜயாப்புராவில் 92 பேர், யாதகிரியில் 70 பேர் வைரசுக்கு பாதிக்கப்பட்டனர். கர்நாடகத்தில் இதுவரை 6 கோடியே 21 லட்சத்து 59 ஆயிரத்து 532 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 38 லட்சத்து 44 ஆயிரத்து 338 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வைரஸ் தொற்றுக்கு பெங்களுரு நகரில் 13 பேர், தட்சிண கன்னடாவில் 10 பேர், மண்டியா, மைசூருவில் தலா 6 பேர், சிவமொக்கா, துமகூருவில் தலா 5 பேர், கலபுரகி, கோலார், பீதர், பல்லாரியில் தலா 4 பேர், உடுப்பி, உத்தர கன்னடாவில் தலா 3 பேர், ஹாவேரி, தாவணகெரேயில் தலா 2 பேர், பெலகாவி, பெங்களூரு புறநகர், சிக்பள்ளாப்பூர், சிக்கமகளூரு, தார்வார், கதக், கொப்பல், ராய்ச்சூர், ராமநகர், விஜயாப்புராவில் தலா ஒருவர் என 81 பேர் இறந்தனர். இதுவரை 39 ஆயிரத்து 137 பேர் கொரோனாவுக்கு தங்களது உயிரை இழந்து உள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 40 ஆயிரத்து 903 பேர் நேற்று குணம் அடைந்தனர். இதுவரை 36 லட்சத்து 27 ஆயிரத்து 925 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 244 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பு 12.55 சதவீதமாகவும், உயிரிழப்பு 0.39 சதவீதமாகவும் உள்ளது.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்து 366 ஆகவும், உயிரிழப்பு 58 ஆகவும் இருந்தது. ஆனால் நேற்று பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.