search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு- ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டி
    X

    காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு- ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டி

    • முதற்கட்டமாக 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியீடு.
    • திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிடுகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

    அதன்படி, பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

    இந்நிலையில், காங்கிரஸ் தனது முதற்கட்டமாக 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இதில், ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதுபோல், திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிடுகிறார்.

    ஆலப்புழாவில் கே.சி.வேணுகோபால், சத்தீஸ்கர் (ராஜ்னம்த்லோன்) பூபேஸ் பேகல், மாண்டியாவில் வெங்கட்ராம கவுடா, டி.கே.சுரேஷ் குமார் பெங்களூரு ஊரகத்திலும் போட்டியிடுகின்றனர்.

    Next Story
    ×