பூனைக்குட்டிக்கு பெயர் சூட்டு விழா- வீடியோ வைரல்

பூனைக்குட்டியை அலுவலகத்திற்கு கொண்டு வந்த போது அதற்கு ஆரத்தி எடுத்தனர்.வீடியோ காட்சிகள் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டது.
பூனைக்குட்டிக்கு பெயர் சூட்டு விழா- வீடியோ வைரல்
Published on

வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு பெயர் வைத்து அழைப்பது வழக்கம். ஆனால் புனேவை சேர்ந்த ஒரு நிறுவன பணியாளர்கள் தாங்கள் ஆசையாக வளர்க்கும் பூனைக்குட்டிக்கு பெயர் சூட்டு விழா நடத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

புனேவில் நரியால் என்ற பெயரில் இயங்கி வரும் அழகு சாதன நிறுவன ஊழியர்கள் தங்கள் அலுவலகத்தில் ஒரு பூனைக்குட்டியை ஆசையாக வளர்க்கின்றனர். அந்த பூனைக்குட்டிக்கு பெயர் சூட்டு விழா நடத்த முடிவு செய்து, அதனை விமர்சையாக நடத்தி உள்ளனர்.

அதன்படி பூனைக்குட்டியை அலுவலகத்திற்கு கொண்டு வந்த போது அதற்கு ஆரத்தி எடுத்தனர். பின்னர் அதன் நெற்றியில் திலகம் இட்டு சாமந்தி பூ இதழ்கள் பொழிந்து வரவேற்றனர். அதோடு பூனைக்குட்டிக்காக சாக்லேட் கேக் வாங்கி அதனை வெட்டி கொண்டாடினர். விழாவின் போது பூனைக்குட்டிக்கு 'கோகாயா' என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டது. இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் நிறுவன ஊழியர்களை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com