இரு பிரிவினருக்கு இடையேயான மோதலால் பாதிரியார்கள் மீது தாக்குதல்: தேவாலயத்தை பூட்டிய காவல்துறை

பதற்றம் தொடர்ந்து அதிகரித்ததால், காவல்துறை அதிகாரிகள் ஆலயத்தை தற்காலிகமாக பூட்டு போட்டு பூட்டினர்.
Kerala Church
இரு பிரிவினரின் வாக்குவாதம் வன்முறையாக மாறி பாதிரியார்கள் தாக்கப்பட்டதால் ஆலயத்தை பூட்டிய காவல்துறை
Published on

கேரளாவில் மூவாற்றுப்புழா அருகே உள்ள பிரமடத்தில் அமைந்துள்ள மலங்கரா ஆலயத்தில் ஆர்த்தடாக்ஸ் மற்றும் ஜேக்கபைட் பிரிவுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆலயத்திற்குள் மோதிக்கொண்டனர்.

கேரளாவில் ஆலயத்தில் மோதல்

கொச்சியில் அமைந்துள்ள புனித யோவான் பெத்லகேம் ஆலயம் ஜேக்கபைட் என்ற பிரிவினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் பாதிரியார்கள் தலைமையிலான ஆர்த்தடாக்ஸ் என்ற பிரிவினர், நீதிமன்ற உத்தரவு தங்களுக்குச் சாதகமாக இருப்பதாக கூறி ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் கூட்டம் நடத்த வந்தனர்.

அப்போது மற்றொரு ஜேக்கபைட் பிரிவினர் ஆலயத்திற்குள் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்தனர். அங்கு வந்த ஆர்த்தடாக்ஸ் பிரிவினர்களிடம் முன்சிப் நீதிமன்றம் தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பளித்துள்ளதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாய்மொழி வாக்குவாதம் வன்முறையாக மாறியதை தொடர்ந்து, இரு தரப்பு பாதிரியார்களும் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள், பிரச்சனையை சுமூகமாக தீர்க்கும்படி கூறினர்.

ஆலயத்தை பூட்டிய காவல்துறை

ஆனால் பதற்றம் தொடர்ந்து அதிகரித்ததால், காவல்துறை அதிகாரிகள் ஆலயத்தை தற்காலிகமாக பூட்டு போட்டு பூட்டினர். இதைத்தொடர்ந்து திங்கட்கிழமை மாலை இருதரப்பை சேர்ந்தவர்களும் மாவட்ட நிர்வாகத்தில்டம் பேச்சுவார்த்தை நடத்தும்படி காவல்துறை கூறியது.

ஆலயத்தில் நடந்த தாக்குதலில் பாதிரியார்கள் காயமடைந்ததாக இரு தரப்பினரும் குற்றம்சாட்டி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பாதிரியார்கள் குற்றச்சாட்டு

இதுகுறித்து ஜேக்கபைட் சிரியன் ஆலயத்தின் ஊடகப் பிரிவுத் தலைவர் குரியகோஸ் மோர் கூறுகையில், “தேவாலயத் தகராறு தொடர்பான பிரச்சினைகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதால், ஒரு சுமுகமான தீர்வைக் காண்பதற்காக மாநில அரசு இரு தரப்பினருடனும் மத்தியஸ்தப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், ஜேக்கபைட் பிரிவினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களில் வேண்டுமென்றே பிரச்சனையை உருவாக்குவதும் பதற்றத்தைத் தூண்டுவதும் அமைதி முயற்சிகளைப் பாதிக்கும்” என்று அவர் கூறினார்.

இதையடுத்து ஆர்த்தடாக்ஸ் பிரிவர் சேர்ந்த ஊடகப் பிரிவின் தலைவரான யுஹானோன் மோர் கூறுகையில், “புனித குர்பானாவைக் கொண்டாட வந்த பாதிரியார் மற்றும் பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் நாங்கள் கண்டிக்கிறோம்.

சட்டப்படி நியமிக்கப்பட்ட பிரிவினருக்கு இடையூறு செய்யக்கூடாது என்று மூவாற்றுப்புழா துணை நீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பளித்துள்ளது” என்று அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com