சுதந்திர தினத்தில் சிஜேபியின் அதிகாரப்பூர்வ கணக்கு முடக்கம்.. கோழைகள் என சிஜேபி பதிவு

சுதந்திர தினத்தன்று கணக்கை முடக்குவது எங்கள் குரலை ஒடுக்குவதாக உள்ளது என சிஜேபி கட்சி தெரிவித்துள்ளது.
CJP Instagram
Published on

சுதந்திர தினமான இன்று தங்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கு காலையில் முடக்கப்பட்ட நிலையில், தற்போது அது மீண்டும் சரி செய்யப்பட்டுள்ளதாக கரப்பான்பூச்சி கட்சி (சிஜேபி) தெரிவித்துள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்து 80 ஆணடுகள் ஆன நிலையில், ஆகஸ்ட் 15 அன்று எங்கள் கணக்கு முடக்கப்படுவது, சுதந்திர தினத்தன்று எங்கள் குரலை ஒடுக்கும் முயற்சியாக உள்ளது என சிஜேபி கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிஜேபி வெளியிட்ட பதிவில், “காக்ரோச் ஜனதா கட்சியை எதிர்ப்பவர்கள் எங்கள் குரலை ஒடுக்க முயற்சிப்பதற்காக நினைக்கிறார்கள். இந்தியாவின் சுதந்திர தினமான இன்று காக்ரோச் ஜனதா கட்சியை அமைதியாக்க முயற்சிப்பது வெட்கக்கேடானது.

எங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ள கோழைத்தனமான செயல்களை கண்டு, நாங்கள் அஞ்சமாட்டோம்,”என்று தெரிவித்துள்ளது.

இந்த முடக்கம் குறித்து சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே கூறுகையில், “அவர்கள் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கியுள்ளனர், கோழைகள்!” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து இன்றைய தினம் பிற்பகுதியில் தங்கள் கணக்கு மீட்டெடுக்கப்பட்டதாக சிஜேபி தெரிவித்துள்ளது.

முன்னதாக வேலையின்மை, கல்வி மற்றும் இளைஞர்களிடையே உள்ள கவலைகள் குறித்த கேள்விகளை எழுப்பி, பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் நாட்டின் இளைஞர்களை சந்தித்து பேச வேண்டும் என்று வலியுறுத்தி தனது பிரச்சாரத்தை தொடங்கியிருந்தார்.

இதைத்தொடர்ந்து தங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக சிஜேபி தெரிவித்துள்ளது.

மேலும், அரசு மற்றும் கிராம பள்ளிகளின் நிலை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள், மாணவர்கள் மற்றும் கல்வி தொடர்பான பிரச்சினைகள் குறித்த போராட்டங்கள் உள்ளிட்ட, சமீப வாரங்களில் சி.ஜே.பி. நடத்தி வரும் தொடர் பிரச்சாரங்களுக்கு மத்தியில் இந்த வகையிலான முடக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சிஜேபி தெரிவித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com