ஞானேஷ் குமாரை பதவி நீக்க வலியுறுத்தி நவ.7ல் கொச்சியில் CJP ஆர்ப்பாட்டம்!

டெல்லி காவல்துறையின் கெடுபிடிகளையும் தடையையும் மீறி இந்த இயக்கம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
  Abhijit Deepke
Published on: 
Summary

டெல்லிக்கு வெளியே சிஜேபி நடத்தும் முதல் மாபெரும் போராட்டமாக கொச்சியில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டம் பார்க்கப்படுகிறது. "ஜனநாயகத்தைக் காப்போம், எஸ்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்வோம்" என்ற முழக்கத்தின் அடிப்படையில் கொச்சியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்களும் மாணவர்களும் பங்கேற்க உள்ளனர்.

தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து, காக்ரோச் ஜனதா கட்சி தனது தேர்தல் ஆணையத்திற்கு எதிரான எதிர்ப்பைக் கேரள மாநிலம் கொச்சிக்கு மாற்றியுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரியும் நவம்பர் 7 ஆம் தேதி கொச்சியில் பிரம்மாண்டமான போராட்டத்திற்கு சிஜேபி அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. டெல்லி காவல்துறையின் கெடுபிடிகளையும் தடையையும் மீறி இந்த இயக்கம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜந்தர் மந்தர் பகுதியைத் போராட்டக் தளங்களின் பட்டியலிலிருந்து அரசாங்கம் நீக்கியுள்ள சூழலில், அங்கு அனுமதியின்றிப் போராட்டம் நடத்த முயன்ற சிஜேபி அமைப்பின் நிறுவனரான அபிஜீத் தீப்கே, தேசிய செயலாளர் ஆஃப்ரீன் நவாஸ், அசுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தேசியக் கொடியை ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்தத் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜனநாயக உரிமைகளுக்கான குரல்களை முடக்க நினைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகத் தலைநகருக்கு வெளியே தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கொச்சியில் போராட்டம்

டெல்லிக்கு வெளியே சிஜேபி நடத்தும் முதல் மாபெரும் போராட்டமாக கொச்சியில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டம் பார்க்கப்படுகிறது. "ஜனநாயகத்தைக் காப்போம், எஸ்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்வோம்" என்ற முழக்கத்தின் அடிப்படையில் கொச்சியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்களும் மாணவர்களும் பங்கேற்க உள்ளனர். தேர்தல் முறைகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கொச்சியில் தீவிரமடைந்துள்ள இந்த எதிர்க்கட்சிகளின் போராட்டம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X