கொச்சி விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவும் ரோபோ அறிமுகம்..!

பயணிகளுக்கான சேவைகள் மற்றும் வசதிகளை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக ரோபா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கொச்சி விமான நிலையம்
கொச்சி விமான நிலையம்
Published on

கேரள மாநிலமை் கொச்சின் விமான நிலையத்தில் முதல் கட்டமாக, உள்நாட்டுப் பிரிவு பாதுகாப்புப் பகுதியில் (Domestic Security Hold Area) அமைந்துள்ள கலங்கன் (Kalangan) எனும் கலை அருங்காட்சியகத்தில் பயணிகளுக்கு உதவும் ரோபோ ஒன்று பணியமர்த்தப்பட்டுள்ளதாக CIAL தெரிவித்துள்ளது. CIAL-ன் நிர்வாக இயக்குநர் எஸ். சுஹாஸ் (IAS) இந்த ரோபோ சேவையைத் தொடங்கி வைத்தார்.

பயணிகளை வரவேற்கும் ரோபோ

இந்த ரோபா பயணிகளை வரவேற்பது, வழிமுறைகள் வழங்குவது, விமானத்தின் நேரம் குறித்த தகவல்களை வழங்குவது உள்ளிட்ட பணிகளை செய்யும். அத்துடன் பயணிகளை விமானத்தில் ஏறும் வாயில்கள் (boarding gates) மற்றும் பிற விமான நிலைய வசதிகளுக்கு அழைத்துச் செல்கிறது.

CIAL சேவைகள், விமான அட்டவணைகள் மற்றும் வாயில் எண்கள் உள்ளிட்ட பயணம் தொடர்பான உதவிகளைப் பெற பயணிகள் இந்த ரோபோவுடன் உரையாடலாம்.

கதகளி மற்றும் ஒட்டன்துள்ளல் போன்ற பாரம்பரிய கலை வடிவங்கள் மற்றும் கலங்கன் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சிற்பங்கள், கலைப்படைப்புகள் பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் கேரளாவின் கலாச்சார பாரம்பரியத்தையும் இந்த ரோபோ முன்னிலைப்படுத்தும்.

செக்-இன் கூடங்களிலும் பணியமர்த்த திட்டம்

மேலும், இது பயணிகளை அந்தந்தக் கலைக் கண்காட்சிப் பகுதிகளுக்கு வழிநடத்திச் செல்லும். அடுத்த கட்டமாக, விமான நிலையத்தின் செக்-இன் (check-in) கூடங்களிலும் பயணிகளுக்கு உதவும் ரோபோக்களைப் பணியமர்த்த CIAL திட்டமிட்டுள்ளது.

அத்துடன், முனையத்திற்குள் பயணிகளுக்கு நேரடியாக உணவு மற்றும் பிற பொருட்களைக் கொண்டு வந்து சேர்க்கக்கூடிய 'டெலிவரி ரோபோக்களை' (delivery robots) அறிமுகப்படுத்துவது குறித்தும் விமான நிலைய நிர்வாகம் பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புனேவைச் சேர்ந்த கைனடிக்ஸ் ரோபோட்டிக்ஸ் (Kinetics Robotics) நிறுவனம் CIAL-க்காக இந்த ரோபோவை உருவாக்கியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com